Day: July 15, 2020

முதல் முறையாக இந்தியாவில் இருந்து இயங்கும் திபெத் அரசுக்கு அமெரிக்கா நேரடி நிதி உதவி; சீனாவிற்கு மற்றொரு எச்சரிக்கை !!

July 15, 2020

தனது வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தியாவில் இருந்து இயங்கி வரும் திபெத்திய அரசுக்கு அமெரிக்கா நேரடியாக நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவின் ஹிமாச்சல பிரதேச மாநிலம் தரம்சாலா நகரில் இருந்து கயங்கி வரும் திபெத்திய அரசுக்கு அமெரிக்கா சுமார் 1 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு திபெத்தை சீனா சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ளதற்கு எதிரான உலகளாவிய நடவடிக்கைகளை வேகப்படுத்துவதற்கான அதிபர் ட்ரம்பின் முடிவாக பார்க்கப்படுகிறது. இது சீனாவை […]

Read More

தென்சீன கடல் பகுதிக்கு தனது அதிநவீன பிரம்மாண்ட விமானந்தாங்கி கப்பலை நிரந்தரமாக அனுப்பும் முடிவில் இங்கிலாந்து; சீனாவுக்கு அடுத்த சவால் ??

July 15, 2020

இங்கிலாந்து தலா 5.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான இரண்டு பிரம்மாண்ட விமானந்தாங்கி கப்பல்களை கட்டி உள்ளது. அதில் முதல் கப்பலான ஹெச்.எம்.எஸ். குயின் எலிஸபெத் விமானந்தாங்கி கப்பலை இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்திற்கு குறிப்பாக தென்சீன கடல்பகுதிக்கு நிரந்தரமாக அனுப்ப உள்ளதாக தெரிகிறது. சீனாவின் அடாவடித்தனமும், ஹாங்காங்கில் அந்நாடு நிகழ்த்தி வரும் அடக்குமுறையும் இதற்கு மிக முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகின்றன. ஐரோப்பாவில் நேட்டோ படைகளுக்கு ஒரு விமானந்தாங்கி கப்பல் படையணியை இங்கிலாந்து தனது இரண்டாம் கப்பல் மூலம் […]

Read More

போர் பதற்றம்; அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் எல்லையில் சண்டை 16 பேர் பலி !!

July 15, 2020

மிக நீண்ட காலமாகவே அர்மீனியா மற்றும் அஸர்பெய்ஜான் ஆகிய நாடுகளுக்கு இடையே எல்லை பிரச்சினை உள்ளது. நகார்னோ கராபக் பிரச்சினை என அழைக்கப்படும் இது நகார்னோ கராபக் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழு மாவட்டங்களை உரிமை கோரி இரு நாடுகளும் ஈடுபட்டு வரும் பிரச்சினை ஆகும். இந்த பிரச்சினை காரணமாக இதுவரை மூன்று முறை இந்நாடுகள் போரில் ஈடுபட்டு உள்ளன, மேலும் இருநாடுகள் இடையே எவ்வித அரசாங்க தொடர்புகளும் கிடையாது. இப்படி நீண்ட காலமாக பதற்றம் […]

Read More

ஐ.நா அமைதிப்படைக்கு மஹிந்த்ரா கவச வாகனம் !!

July 15, 2020

சமீபத்தில் மஹிந்த்ரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்த்ரா ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார் அதில் “மஹிந்த்ரா கவச வாகனம் ஐக்கிய நாடுகள் அமைதிப்படை பணிகளுக்காக சப்ளை செய்யப்பட்டதாக தெரிவித்தார்”. இந்த வாகனத்தில் வெடிகுண்டுகளை கையாளும் வகையில் இயந்திர கை ஒன்று உள்ளது, மேலும் இது கண்ணிவெடி தாக்குதலில் இருந்தும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது, சாலைகளற்ற கரடு முரடான நிலபரப்பிலும் திறம்பட செயல்படும் திறன் கொண்டது. இந்த வாகனம் 7.62×51, 7.62×39 மற்றும் 5.56×45 ஆகிய […]

Read More

இந்தியாவை ரயில்வே திட்டத்தில் இருந்து வெளியேற்றிய ஈரான் !!

July 15, 2020

நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவும் ஈரானும் சாபஹார் துறைமுகத்தில் இருந்து ஆஃப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள ஸாஹேதான் பகுதிக்க ரயில் பாதை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டன. தற்போது இந்தியா நிதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி இந்தியாவை வெளியேற்றி விட்டு தானாகவே இத்திடத்தை செயல்படுத்த ஈரான் முடிவு செய்துள்ளது. கடந்த வாரம் ஈரானிய போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் மொஹம்மது எஸ்லாமி இத்திடத்தை துவக்கி வைத்தார். அந்நாட்டு அரசு வட்டார தகவல்களின் படி இத்திட்டம் […]

Read More

அவசரமாக இலகுரக டாங்கிகள் வாங்க இந்தியா முடிவு !!

July 15, 2020

சமீபத்தில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினையின் போது சீனா தனது ZTQ15 இலகுரக டாங்கிகளை எல்லையில் குவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியா தனது கனரக T 72 மற்றும்T 90 டாங்கிகளை குவித்தாலும் அவற்றால் மலைப்பகுதியில் இலஙரக டாங்கிகளை போல லாவகமாக செயல்பட முடியாது. ஆகவே இதற்கான தேவையை உணர்ந்த நிலையில் தற்போது இலகுரக டாங்கிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு ரஷ்யாவின் ஸ்ப்ரட் எஸ்.டி எம் 1 ரக டாங்கியை இறக்குமதி செய்ய […]

Read More

இங்கிலாந்தில் ஹூவாய் நிறுவனத்திற்கு தடை !!

July 15, 2020

இங்கிலாந்து அரசு சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை தனது 5ஜி தொழில்நுட்ப நிறுவதல் பணிகளில் இருந்து வெளியேற்றி உள்ளது. இங்கிலாந்தின் டிஜிட்டல், ஊடகம், விளையாட்டு, கலாச்சார செயலர் ஆலிவர் டவ்டென் இந்த அறிவிப்பை வெளியிட்டார் மேலும் அந்நாட்டு பாராளுமன்றமான ஹவுஸ் ஆஃப் காம்மன்ஸில் இந்த வருட இறுதி முதல் ஹூவாய் பொருட்களின் இறக்குமதி முற்றிலும் தடை செய்யப்படும் எனவும், 2027ஆம் ஆண்டு வாக்கில் அனைத்து ஹூவாய் கருவிகளும் இங்கிலாந்து தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் இருந்து அகற்றப்படும் எனவும் கூறினார். […]

Read More

பூட்டானில் சீனா உரிமை கோரும் பகுதியில் சாலை அமைக்க இந்தியா விருப்பம் !!

July 15, 2020

பூட்டான் நாட்டின் கிழக்கு பகுதியில் இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் ட்ராஷிகாங் மாவட்டம் அமைந்துள்ளது. இந்த மாவட்டத்தில் சமீபத்தில் சர்வதேச அமைப்பு ஒன்று சாக்டெங் பகுதியில் சரணாலயம் அமைப்பது குறித்து நடத்திய ஆலோசனை கூட்டத்தில் அது தங்களுக்கு உரிய பகுதி ஆகவே அங்கு பணிகளை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்தது. இந்த பகுதியில் தற்போது இந்தியா சாலை ஒன்றை அமைக்க விருப்பம் தெரிவித்து உள்ளது. இந்த சாலை கவுகாத்தி மற்றும் தவாங் இடையிலான 150 கிலோமீட்டர் பயண தூரத்தை […]

Read More

AK-47 குண்டுகளை தடுத்து நிறுத்தும் 100000 தலைக்கவசம் வாங்க முடிவு

July 15, 2020

வீரர்கள் சுயபாதுகாப்பை அதிகரிக்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகளை இந்திய இராணுவம் மேற்கொண்டு வருகிறது.அதன் ஒரு பகுதியாக உயிர்காக்கும் தளவாடங்கள் பெறப்பட்டு வருகின்றன.தற்போது ஏகே-47 குண்டுகளை தடுத்து நிறுத்தக்கூடிய 100,000 தலைக்கவசங்களை இந்திய இராணுவம் வாங்க உள்ளது. இதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு தலைக்கவச தயாரிப்பு நிறுவனங்களிடம் இருந்து தகவல்களை இராணுவம் கேட்டுள்ளது. இதற்கான பட்ஜெட் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை எனினும் சுமார் 500கோடிகள் செலவில் இந்த தலைக்கவசங்கள் பெறப்படலாம்.இந்த தலைக்கவசங்கள் தற்போது செயல்பாட்டில் உள்ள பட்கா […]

Read More

அஸ்ஸாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் சுரங்கபாதை அமைக்க மத்திய அரசு அனுமதி !!

July 15, 2020

அஸ்ஸாம் மாநிலத்தில் கோஹ்பூர் மற்றும் நுமாலிகர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா நதிக்கு அடியில் சுரங்கபாதை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இந்த புதிய நான்கு வழிப்பாதை மூலமாக வருடம் முழுவதும் தங்கு தடையின்றி போக்குவரத்து நடைபெறும். சுமார் 80 கிலோமீட்டர் வேகத்தில் ராணுவ நகர்வுகள் நடைபெற இது உதவும். இந்த சுரங்கம் சீனாவின் ஜியாங்சு மாநிலத்தில் உள்ள டாய்ஹூ ஏரிக்கு அடியில் கட்டமைக்கப்பட்டுள்ள சுரங்கத்தை விட நீளமானதாகும். சுமார் 14.85 கிலோமீட்டர் […]

Read More