Day: July 14, 2020

செயற்கைகோள்களை லேசர் மூலம் அழிக்கும் திறன் பெற்றுள்ள சீனா; இந்தியாவிற்கு ஆபத்தா ?

July 14, 2020

தரைசார் லேசர் அமைப்பு முதல் இந்திய மற்றும் அமெரிக்க செயற்கைகோள்களை சீனாவால் அழிக்க முடியும் எனவும் இந்த லேசர் கொண்டு செயற்கைகோள்களின் சென்சார்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. போர் காலங்களில் இதன்மூலம் சீனாவால் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என கூறப்படுகிறது.தாழ் ஆர்பிட்டில் பறந்து வரும் செயற்கை கோள்களை இதன் மூலம் அழிக்க முடியும் என பென்டகன் வெளியிட்ட தகவலில் தெரிகிறது. சீனாவின் ஷின்ஷியாங் பகுதியில் இதுபோன்றதொரு செயற்கைகோள் அடையாளம் […]

Read More

அமெரிக்காவின் F-16C விமானம் விபத்து

July 14, 2020

நியு மெக்சிகோவின் ஹோலோமான் விமானப்படை தளத்தில் தரையிறங்கிய போது இந்த சம்பவம் நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மே முதல் இதுவரை கிட்டத்தட்ட ஐந்து இதுபோன்ற விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. அங்கு மாலை 6 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விமானி பத்திரமாக விமானத்தில் இருந்து வெளியேறி உள்ளார்.இந்த விமானம் 49வது விங்கை சேர்ந்தது. விபத்து குறித்து அறிய தற்போது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.கடைசி இரு மாதத்தில் மட்டும் அமெரிக்க விமானப்படை ஐந்து விமானங்களை இழந்துள்ளது.இதில் இரு விமானிகளும் மரணமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Read More

வந்தே மாதரம் என முழங்கிய பாகிஸ்தானியர்கள் ; லண்டனில் இந்தியர்களுடன் இணைந்து சீனாவுக்கு எதிராக போராட்டம் !!

July 14, 2020

லண்டன் நகரில் உள்ள சீன தூதரகத்திற்கு வெளியே இந்தியர்கள் சீனாவின் மண்ணாசைக்கு எதிராக போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் பாகிஸ்தானியர்களும் ஈரானியர்களும் கலந்து கொண்டு தங்களது நாடுகளில் சீனா அதிகம் மூக்கை நுழைப்பதாக கூறி சீன எதிர்ப்பு கோஷங்களை எழுப்பினர். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் பாகிஸ்தானியர்கள் இந்தியர்களுடன் இணைந்து வந்தே மாதரம் பாடலை பாடியது தான். இது குறித்து பேசிய பாகிஸ்தானியர் ஆரீஃப் ஆஜாக்கியா தனது வாழ்க்கையில் முதல் முறையாக வந்தே மாதரம் பாடலை பாடியதாக தெரிவித்தார். […]

Read More

ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் 11பேர் பலி பலர் படுகாயம் !!

July 14, 2020

வடக்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஸமாங்கான் மாகாணத்தின் தலைநகர் அய்பக்கில் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த அலுவலகத்தின் மீது 4 தலிபான்கள் தாக்குதல் நடத்தினர், இந்த கொடூர தாக்குதலில் 11 பாதுகாப்பு படையினர் வீழ்த்தப்பட்டனர். மேலும் 60க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அம்மாநில ஆளுநரான அப்துல் லாத்தீஃப் இப்ராஹீமி செய்தியாளர்களிடம் பேசுகையில் பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 […]

Read More

சர்வதேச தீர்ப்பாயத்தின் உத்தரவை நிராகரிப்பதாக சீனா அடாவடி !!

July 14, 2020

கடந்த 2016ஆம் ஆண்டு சீனா தென்சீன கடல் பகுதியில் பெருமளவிலான பகுதிகளை உரிமை கோரியதை அடுத்த இது பற்றிய வழக்கு ஒன்று சர்வதேச தீர்ப்பாயம் ஒன்றின் முன்னர் விசாரணைக்கு வைக்கப்பட்டது. ஃபிலிப்பைன்ஸ் அரசு சார்பில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையில் சர்வதேச தீர்ப்பாயம் சீனாவின் உரிமை கோரல்களை நிராகரித்து உத்தரவு பிறப்பித்ததது. இந்த நிலையில் இந்த தீர்ப்பை சீனா மதித்து செயல்பட வேண்டும் என ஃபிலிப்பைன்ஸ் அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால் சீனா அதற்கு பதிலாக இத்தகைய தீர்ப்பாயங்களில் […]

Read More

கடலோர பாதுகாப்புக்கு இஸ்ரேலின் ஷால்டாக் அதிவேக ரோந்து படகுகளை வாங்கும் ஃபிலிப்பைன்ஸ் !!!

July 14, 2020

ஃபிலிப்பைன்ஸ் அரசு இஸ்ரேலிடம் இருந்து 8 ஷால்டாக் அதிவேக ரோந்து படகுகளை (Shaldag class fast patrol boat ) வாங்க முடிவு செய்துள்ளது. இந்த படகுகளில் நான்கு இஸ்ரேலிலும், நான்கு ஃபிலிப்பைன்ஸிலும் கட்டப்பட உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 203மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த படகுகளில் 14 வீரர்கள் பயணிக்க முடியும், 1 டைஃபூன் தானியங்கி துப்பாக்கி, 2 மினி டைஃபூன் கனரக இயந்திர துப்பாக்கிகள் மற்றும் 8 குறுந்தூர கப்பல் எதிர்ப்பு […]

Read More

ரேடார் கண்காணிப்பு ஒப்பந்தத்தை நோக்கி நகரும் ஜப்பான் மற்றும் ஃபிலிப்பைன்ஸ் !!

July 14, 2020

சில ஜப்பானிய ஊடகங்களில் ஃபிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ரேடார் கண்காணிப்பு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி தைவான் நாட்டுக்கு அருகில் உள்ள ஃபிலிப்பைன்ஸ் நாட்டின் பகுதி ஒன்றில் ஜப்பான் தனது ரேடார் மையத்தை அமைக்க விரும்புகிறது. இதன் மூலம் அப்பகுதியில் சீன விமானங்களின் நடமாட்டங்களை ஜப்பான் அறிந்து கொள்ள முடியும். அதே நேரத்தில் ஜப்பானின் ஒகினாவா பகுதியில் உள்ள ரேடார் மையத்தின் கண்காணிப்பு தகவல்கள் ஃபிலிப்பைன்ஸுடன் பகிர்ந்து கொள்ளப்படும். […]

Read More

பெருமளவில் தயாரிக்கப்பட உள்ள சீனாவின் ஐந்தாம் தலைமுறை போர்விமானமான J20b !!

July 14, 2020

சீனாவின் முதல் ஐந்தாம் தலைமுறை விமானம் ஜே20 ஆகும், இதனை செங்டு ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் தயாரித்துள்ளது. இந்த ஜே20 ஐந்தாம் தலைமுறை விமானமாக தயாரிக்கப்பட்டாலும் ஆனால் அதற்குரிய பல தேவைகளை பூர்த்தி செய்யவில்லை. இந்த நிலையில் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு முழுமையான ஐந்தாம் தலைமுறை போர் விமானமாக ஜே20பி ரகம் உருவாக்கப்பட்டது. தற்போது இது பெருமளவில் தயாரிக்கப்பட்டு சீன விமானப்படையில் இணைக்கப்பட உள்ளது. தற்போது வரை 50 ஜே20 விமானங்கள் சீன விமானப்பிடையில் […]

Read More

இன்று இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே 4ஆவது சுற்று பேச்சுவார்த்தை !!

July 14, 2020

இன்று காலை 11:30 மணியளவில் இந்திய மற்றும் சீன ராணுவ கமாண்டர்கள் இடையேயின 4ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன. இதில் இந்தியா சார்பில் 14ஆவது கோர கட்டளை அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனா சார்பில் தெற்கு ஸின்ஜியாங் ராணுவ பகுதி தளபதியுமான மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த சுற்று பேச்சுவார்த்தையில் தெப்ஸாங், தவ்லத் பெக் ஒல்டி செக்டாரில் உள்ள சீன படைகள் பின்வாங்குவது மற்றும் இருதரப்பிலும் […]

Read More

சீனாவுக்கு நெத்தியடி; தென்சீன கடலில் சீனா உரிமை கோருவது சட்ட விரோதம் என அமெரிக்கா அறிவிப்பு !!

July 14, 2020

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சீனாவை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில் சீனா தென்சீன கடல் பகுதியில் உள்ள வளங்களை மனதில் வைத்து கொண்டு மிகப்பெரிய அளவிலான பகுதிகளை சட்ட விரோதமாக உரிமை கோருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் சீனா உரிமை கோரும் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவையாவன;1) மலேசியாவில் இருந்து 50 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள ஜேம்ஸ் ஷோல் பகுதி. 2) வியட்நாம், இந்தோனேசியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் […]

Read More