Day: July 12, 2020

இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள இஸ்ரேலிய துப்பாக்கிகள் !!

July 12, 2020

உள்நாட்டு தொழில்துறையை ஊக்குவிக்கும் வகையில் இரண்டு இஸ்ரேலிய துப்பாக்கிகளை மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற்சாலையில் தயாரிக்க உள்ளோம். இந்த தொழிற்சாலை இந்திய இஸ்ரேலிய நிறுவனங்களின் கூட்டு முயற்சியில் உருவானதாகும். இந்தியாவின் பி.எல்.ஆர் சிஸ்டம்ஸ் மற்றும் இஸ்ரேலின் இஸ்ரேலிய ஆயுத தொழிற்சாலை ஆகியவை இணைந்து தோற்றுவித்த தொழிற்சாலை ஆகும். கார்மெல் மற்றும் அராட் ஆகிய இரு வகையான துப்பாக்கிகள் தயாரிக்கப்பட உள்ளன. கார்மெல் துப்பாக்கி 5.56×45 மிமீ காலிபர் திறன் கொண்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இது […]

Read More

ஒரு புதிய 110கிலோநியூட்டன் என்ஜினை தயாரிக்க இணையும் இந்தியாவின் DRDO மற்றும் இங்கிலாந்தின் ROLLS ROYCE !!

July 12, 2020

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய பிரிவு துணை தலைவரான லூயில் டோனாகி சமீபத்தில் இந்தியாவுடன் இணைந்து ஒரு பதிய என்ஜினை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார். இரு நாட்டு அரசுகளின் ஒத்துழைப்போடு இதனை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம், இதன் மூலம் ஒரு புதிய ஜெட் என்ஜினை நாங்கள் உருவாக்க உள்ளோம், இதன் தனிப்பட்ட உரிமை இந்தியாவுக்கே உரியதாகும் என லூயிஸ் டோனாகி தெரிவித்தார். கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய பிரிட்டன் பாதுகாப்பு செயலர் […]

Read More

மூன்று பாக் பயங்கரவாதிகளை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

July 12, 2020

பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் என்னுமிடத்தில் இன்று நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பாக் பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர். இராணுவத்தின் 22வது இராஷ்டீரிய ரைபிள்ஸ்,சிஆர்பிஎப் மற்றும் காஷ்மீர் காவல்துறை வீரர்கள் இணைந்து நடத்திய ஆபரேசனில் மூன்று பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர். இந்த ஆபரேசனில் ஏகே துப்பாக்கிகளும் வெடிபொருள்களும் கைப்பற்றப்பட்டன.

Read More

சிஆர்பிஎப் வீரர்கள் மீது கிரேனேடு தாக்குதல் !

July 12, 2020

புல்வாமா மாவட்டத்தின் சார்சூ பகுதியில் மாலை 4.45 அளவில் சிஆர்பிஎப் வீரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பைக்கில் வந்த பயங்கரவாதிகள் இரு கிரேனேடை எடுத்து சிஆர்பிஎப் வீரர்கள் மீது வீசியுள்ளனர்.கிரேனேடு பின் எடுக்காமல் வீசியதால் அவை இரண்டும் வெடிக்கவில்லை. சுதாரித்துக்கொண்ட வீரர்கள் தற்போது அவர்களை பிடிக்க அந்த பகுதியை சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையை ஈடுபட்டுள்ளனர்.

Read More

இந்திய ராணுவத்திற்கு 72,000 மேலதிக அதிநவீன sig716 துப்பாக்கிகள்; விரைவில் ஒப்பந்தம் !!

July 12, 2020

இந்திய ராணுவத்திற்கு ஏற்கனவே 72,000 Sig716 துப்பாக்கிகள் அமெரிக்காவில் இருந்து வாங்கப்பட்டு தற்போது பயன்பாட்டில் இருக்கும் நிலையில், புதிய ஒப்பந்தம் வழியாக மேலதிகமாக 72,000 புதிய Sig716 துப்பாக்கிகளை வாங்க ராணுவம் முடிவு செய்துள்ளது. அரசு வழங்கிய சிறப்பு நிதி மற்றும் கொள்முதல் அதிகாரங்களை பயன்படுத்தி இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளதாக பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். பல வருட காலமாக பயன்பாட்டில் இருக்கும் இன்சாஸ் துப்பாக்கியை மாற்றிவிட்டு 1 லட்சத்து 44ஆயிரம் Sig716 துப்பாக்கிளையும் […]

Read More

ஆளுங்கட்சி, எதிர்கட்சி ஆதரவுடன் இந்திய வெளியுறவு கொள்கையில் முக்கிய இடத்தை பெறும் நால்வர் கூட்டணி !!

July 12, 2020

கொரோனாவுக்கு பிந்தைய உலகம் மிகப்பெரிய மாற்றங்களை உள்ளடக்கியதாக இருக்க போகிறது. அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக, ராணுவ ரீதியாக உலகம் பல்வேறு மாறறங்களை சந்திக்க போகிறது. அதன் ஒரு பகுதியாக இந்தியாவின் வெளியுறவு கொள்கையில் நால்வர் கூட்டணி மிகப்பெரிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவுக்கு இருக்கும் என நம்பப்படுகிறது. இதற்கெல்லாம் காரணகர்த்தா வேறுயாருமல்ல சீனாவே தான்.இதன் ஒரு பகுதியாக மலபார் […]

Read More

பாங்காங் ஸோ பகுதியில் இருந்து மேலும் பின்வாங்கிய சீன படைகள் !!

July 12, 2020

பாங்காங் ஸோ ஏரியை ஒட்டிய ஃபிங்கர்4 மலைப்பகுதியில் இருந்து சீன படைகள் முழுவதும் வெளியேற வேண்டும் என இந்தியா வலியுறுத்தி வந்த நிலையில், தற்போது சீனா தனது படைபலத்தை இப்பகுதியில் குறைத்துள்ளது. அதாவது ஃபிங்கர்4 மலையின் மேல் உச்சியில் இருந்து சீன படைகள் விலகி உள்ளன. வெறுமனே விலகியதோடு மட்டுமில்லாமல் கணிசமான அளவில் படைபலத்தையும் சீன ராணுவம் குறைத்துள்ளது. அதை போலவே பாங்காங் ஏரியில் நிலை நிறுத்தி இருந்த படகுகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. வெள்ளிக்கிழமை அன்று ராஜாங்க […]

Read More

k30 பிஹோ ஒப்பந்தத்தை விரைவுபடுத்த இந்தியாவுக்கு தென் கொரியா வலியுறுத்தல் !!

July 12, 2020

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சமீபத்தில் தென் கொரிய பாதுகாப்பு அமைச்சரான க்யோங் டூ வுடன் தொலைபேசியில் பேசினார். அப்போது இரு அமைச்சர்களும் பல்வேறு பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் ஒத்துழைப்புகளை குறித்து பேசினர். அப்போது க்யோங் டூ ராஜ்நாத் சிங் இடம் கே30 பிஹோ விமான எதிர்ப்பு அமைப்புகளுக்கான ஒப்பந்தத்தை விரைவுபடுத்துமாறு கோரிக்கை விடுத்தார்.இந்த அமைப்பை இந்திய ராணுவம் கடந்த 2018ஆம் ஆண்டு தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் ரஷ்யா தனது ஆயுத அமைப்பை சரியாக […]

Read More

இந்தியாவின் பி8 விமானங்களுக்கு மிக நவீன ஆயுதம் !!

July 12, 2020

இந்திய கடற்படை உலகின் அதிநவீன நீர்மூழ்கி மற்றும் கப்பல் எதிர்ப்பு வேட்டை விமானமான பி8ஐ இயக்கி வருகிறது. இந்த விமானங்கள் சீன மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு எதிரான மிக முக்கியமான ஆயுத அமைப்பாகும். இந்த விமானங்களில் ஏற்கனவே ஹார்ப்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் அதை விட அதிநவீனமான புதிய ஆயுதம் வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த புதிய ஏவுகணையின் பெயர் ஏ.ஜி.எம் 158சி ஆகும். இது தொலைதூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணை […]

Read More

இஸ்ரோ தலைவர் முனைவர் சிவனுக்கு மிக உயரிய சர்வதேச விருது, நாட்டிற்கு பெருமை !!

July 12, 2020

இஸ்ரோ தலைவராக நமது தமிழகத்தை சேர்ந்த முனைவர் சிவன் திறம்பட பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் சர்வதேச விண்வெளியியல் அகாடமி 2020ஆம் ஆண்டிற்கான சிறந்த விண்வெளி விஞ்ஞானிக்கான வான் கார்மென் விருதை இவருக்கு வழங்க முடிவு செய்துள்ளது, வருகிற 2021 ஆண்டு மார்ச் மாதத்தில் ஃபிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரில் இதற்கான விழா நடைபெற உள்ளது. இந்த விருதை மிகச்சிறந்த ஏரோஸ்பேஸ் பொறியாளரான தியோடர் வான் கார்மென் அவர்களுடைய பெயரில் அவரால் தோற்றுவிக்கப்பட்ட சர்வதேச விண்வெளியில் அகாடமி […]

Read More