
வடகிழக்கு பிராந்திய மாநிலங்களான திரிபுரா, அஸ்ஸாம், மிசோரம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்கள் வங்காளதேசத்துடன் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன.
இந்த எல்லை பகுதியை காவல் காக்கும் பொறுப்பு எல்லை காவல் படையிடம் உள்ளது, இந்த பிராந்தியத்தில் பணியாற்றும் 1100 வீரர்கள் கொரானாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
குறிப்பாக திரிபுரா மாநில எல்லையில் பணியாற்றி வரும் வீரர்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர், சுமார் 720 வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் 138ஆவது பட்டாலியனை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதற்கு அடுத்தபடியாக மேகாலயா மாநிலத்தில் பணியாற்றி வரும் 282 வீரர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
இவர்களில் 70 பேர் குணமடைந்து உள்ளனர், ஆனால் தூரதிர்ஷ்டவசமாக 1 வீரர் மரணத்தை தழுவி உள்ளார்.
எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் கூறுகையில் விடுமுறைக்கு சென்று விட்டு பணிக்கு திரும்பும் வீரர்கள் தான் தொற்றுக்கு ஆளாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.