Breaking News

Day: July 11, 2020

டிக் டாக் செயலி பாதுகாப்பற்றது, தனது பணியாளர்களிடம் அகற்ற உத்தரவிட்ட அமேசான் நிறுவனம் !!

July 11, 2020

அமேசான் நிறுவனம் தனது பணியாளர்களிடம் அவர்களுடைய மொபைல்களில் இருந்து டிக் டாக் செயலியை அகற்ற கோரி மின்னஞ்சல் வாயிலாக அறிவிக்கை அனுப்பி உள்ளது. டிக் டாக் செயலி பாதுகாப்பற்றது என்பதால் அமேசான் மின்னஞ்சலை உபயோகிக்கும் மொபைல்களில் அந்த செயலியை நீக்க வேண்டும் என அமேசான் நிறுவனம் கேட்டு கொண்டுள்ளது. கடந்த வருடம் அமெரிக்க ராணுவமும் தனது அதிகாரிகள் மற்றும் வீரர்கள் டிக் டாக் செயலியை தங்களது மொபைல் மற்றும் லாப் டாப்களில் இருந்து அகற்ற அறிவிக்கை அனுப்பியது […]

Read More

பிரேசில் நாட்டு செயற்கைகோளை விண்ணுக்கு அனுப்பு உள்ள இஸ்ரோ

July 11, 2020

பிரேசில் நாட்டு அமேசானியா-1 செயற்கை கோளை வரும் ஆகஸ்டு மாதம் விண்ணிற்கு அனுப்பு உள்ளது இஸ்ரோ. இதற்கான செயல்பாடுகள் தற்போது நடைபெற்று வருகின்றன.பிஎஸ்எல்வி (PSLV) எனப்படும் போலார் சேட்டிலைட் லாஞ்சிங் வெகிகிள் ராக்கெட் உதவியுடன் இந்த செயற்கை கோள் விண்ணுக்கு அனுப்பப்படும். ஏவம் தேதி மற்றும் நேரம் பின்னர் அறிவிக்கப்பட உள்ளது.பிரேசில் சொந்தமாகவே தயாரித்துள்ள முதல் செயற்கை கோளாக இந்த அமேசானியா-1 உள்ளது. பூமி கண்காணிப்புக்காக இந்த செயற்கை கோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளது பிரேசில்.அமெசான் காடுகளை […]

Read More

ஆறு பயங்கரவாதிகளை வீழ்த்திய அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள்

July 11, 2020

உளவுத் தகவல்கள் அடிப்படையில் அருணாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற என்கௌன்டரில் ஆறு NSCN (IM) பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பயங்கரவாதிகளை அஸ்ஸாம் ரைபிள்ஸ் வீரர்கள் போட்டு தள்ளியுள்ளனர். 4.30 மணிக்கு இந்த என்கௌன்டர் தொடங்கியுள்ளது.கிடைத்த தகவல்கள் அடிப்படையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்த வீரர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் ஒரு வீரர் காயமடைய கடும் சண்டை தொடங்கியுள்ளது.இதில் ஆறு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டனர். கிழக்கின் இராஷ்டிரிய ரைபிள்ஸ் படை தான் இந்த அஸ்ஸாம் ரைபிள்ஸ்…வடகிழக்கின் அமைதி காவலர்கள் இவர்களே.. பாதுகாப்பு […]

Read More

பாரமுல்லாவில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகள்-சுட்டு வீழ்த்திய வீரர்கள்

July 11, 2020

இன்று அதிகாலை எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நடமாட்டங்கள் தென்படுவதை இராணுவ வீரர்கள் கண்டறிந்துள்ளனர். காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் நௌகம் செக்டார் பகுதியில் உள்ள எல்லைக்கட்டுப்பாடு கோடு பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. பயங்கரவாதிகள் ஊடுருவியதை உறுதிப்படுத்திய நமது வீரர்கள் அவர்களுக்கு வலை விரித்தனர். உடனடியாக ஆபரேசனை தொடங்கிய வீரர்கள் இரு பயங்கரவாதிகளையும் வீழ்த்தியுள்ளனர்.அவர்களிடம் இருந்து இரு ஏகே-47 துப்பாக்கிகளும் வெடிபொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Read More

சட்டீஸ்கரில் 25 முக்கிய மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர் அதிரடி நடவடிக்கைகளுக்கு பலன் !!

July 11, 2020

மாவோயிஸ்டுகளை ஒழிக்க மத்திய அரசும் பல்வேறு மாநில அரசுகளும் மிக தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அவர்களை ஒடுக்குவதானாலும் சரி, சரணடைபவர்களுக்கு புதிய வாழ்க்கை அமைத்து கொடுப்பதானாலும் சரி பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சட்டீஸ்கர் மாநிலம் தாண்டேவாடா மாவட்டத்தின் பஸ்தார் பகுதியில் 25 முக்கிய மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர், அவர்களில் மூவரது தலைக்கு தலா 1 லட்சம் ருபாய் வீதம் பரிசுத்தொகை உள்ளது. சரணடைந்த மாவோயிஸ்டுகளுக்கு மாநில அரசு நடைமுறைகளின்படி மறுவாழ்வு உறுதி செய்யப்படும் […]

Read More

பேரன்ட்ஸ் கடல்பகுதியில் ரஷ்ய கடற்படை மாபெரும் போர்ப்பயிற்சி !!

July 11, 2020

ரஷ்ய கடற்படையின் வடக்கு கட்டளையகம் பேரன்ட்ஸ் கடல்பகுதியில் இந்த வருடத்தின் மிகப்பெரிய போர்ப்பயிற்சியை தொடங்கி உள்ளது. அணுசக்தியால் இயங்கும் ராட்சத நாசகாரி கப்பலான ப்யோடிர் வெலிகி மற்றும் சக்திவாய்ந்த ஏவுகணை கப்பலான மார்ஷல் உஸ்டினோவ் மற்றும் 30க்கும் அதிகமான போர்க்கப்பல்கள் இப்பயிற்சியில் கலந்து கொண்டுள்ளன. இவை தவிர சூப்பர்சானிக் குண்டு வீச்சு விமானங்களான டியு22 எம்3 உட்பட 20 விமானங்கள் மற்றும் 40வகையான ஆயுதங்கள் இந்த பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாபெரும் படையணியின் தலைமை கட்டளை அதிகாரியாக […]

Read More

ஹாங்காங் மக்களுக்கு ஆதரவு அளிக்க ஆஸ்திரேலியா முடிவு !!

July 11, 2020

ஹாங்காங் மக்கள் மீது சீன அரசு மிக கொடுரமான அடக்குமுறையை நிகழ்த்தி வருகிறது. மேலும் உலகத்தின் ஏதோ ஒர் பகுதியில் வாழும் ஒருவர் ஹாங்காங் மக்களுக்கு ஆதரவு தெரிவித்தால் அந்த நபரையும் குற்றவாளி ஆக கருதும் சட்டத்தையும் சீனா நிறைவேற்ற முயற்சி செய்கிறது. இந்த நிலையில் ஆஸ்திரேலியா ஹாங்காங் மக்களுக்கு ஆதரவளிக்க முடிவு செய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலியாவில் ஏற்கனவே பல்வேறு காரணங்களுக்காக தங்கி இருக்கும் 10,000 ஹாங்காங் மக்களுக்கான விசா கெடுவை நீட்டிப்பதாகவும், ஹாங்காங் மக்களுக்கு ஆஸ்திரேலிய […]

Read More

சீனாவின் புதிய குவாய்சோ 11 ராக்கெட்டின் முதல் ஏவுதலே தோல்வி !!

July 11, 2020

சீனா குவாய்சோ11 ராக்கெட்டை சமீபத்தில் தயாரித்தது, இது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் குவாய்சோ1ஏ ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும். வெள்ளிக்கிழமை அன்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து இரண்டு செயற்கைகோள்களுடன் ஏவப்பட்டது. ஏவப்பட்ட முதல் ஒரு நிமிடம் வரை நன்கு செயல்பட்ட ராக்கெட் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது, இதில் இரண்டு செயற்கைகோள்குளம் அழிந்தன. முதலாவது செயற்கைகோள் ஜிலின்1 எனும் காணொளி பகிர்வு செயற்கைகோள் ஆகும், இது பிலிபிலி எனும் சீன காணொளி பகிர்வு வலைதளத்திற்காக உருவாக்கப்பட்டது. […]

Read More