1 min read
ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் தாக்குதல் 11பேர் பலி பலர் படுகாயம் !!
வடக்கு ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஸமாங்கான் மாகாணத்தின் தலைநகர் அய்பக்கில் தேசிய பாதுகாப்பு இயக்குநரகத்தின் அலுவலகம் ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தின் மீது 4 தலிபான்கள் தாக்குதல் நடத்தினர், இந்த கொடூர தாக்குதலில் 11 பாதுகாப்பு படையினர் வீழ்த்தப்பட்டனர்.
மேலும் 60க்கும் அதிகமான பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அம்மாநில ஆளுநரான அப்துல் லாத்தீஃப் இப்ராஹீமி செய்தியாளர்களிடம் பேசுகையில் பல மணி நேரம் நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 4 பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டதாக தெரிவித்தார்.