10,000 துணை ராணுவ வீீரர்களை தாக்கிய கொரோனா நோய் !!

  • Tamil Defense
  • July 26, 2020
  • Comments Off on 10,000 துணை ராணுவ வீீரர்களை தாக்கிய கொரோனா நோய் !!

சமீபத்தில் வெளியாகி உள்ள அறிக்கையின்படி சுமார் 10,259 துணை ராணுவ வீரர்களை கொரோனா தாக்கி உள்ளது, இதில் சுமார் 5,572 பேர் குணமாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அதிகம் பாதிக்கப்பட்டது, மத்திய ரிசர்வ் காவல்படை சுமார் 3,341 வீரர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு அடுத்தபடியாக எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் சுமார் 3,164 வீரர்கள் பாதிக்கப்பட்டனர், இதற்கு அடுத்து மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சுமார் 1,639 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மேலும் இந்தோ திபெத் எல்லை காவல்படையில் சுமார் 1,132 வீரர்களும், சாஷ்திர சீமா பல் படையில் 507 பேரும், தேசிய பாதுகாப்பு படையில் 92 வீரர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையில் 393 வீரர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்றைய தினத்தில் மட்டுமே சுமார் 421 துணை ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.