Day: July 10, 2020

சீனாவின் எதிர்ப்பை மீறி ஆஸ்திரேலியாவை மலபார் கடற்படை பயிற்சிக்கு அழைக்கவுள்ள இந்தியா !!

July 10, 2020

சீனாவின் எதிர்ப்புகளை உதாசீனம் செய்து விட்டு மிக நீண்ட காலமாக நடைபெற்று வரும் மலபார் கடற்படை போர் பயிற்சியில் ஆஸ்திரேலியாவை இணையுமாறு அழைப்பு விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. இந்த வாரத்தில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் அரசுகளுடன் கலந்தாலோசித்து விட்டு ஆஸ்திரேலியாவுக்கு முறையான அழைப்பு விடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த வருடத்திற்கான மலபார் போர்ப்பயிற்சி இந்த வருட இறுதியில் வங்காள விரிகுடா கடலில் நடைபெற உள்ளது என ஒரு மூத்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார். இந்தியா உட்பட […]

Read More

தைவானுடைய பேட்ரியாட் ஏவுகணை அமைப்புகளை புதுப்பிக்க அமெரிக்க அரசு ஒப்புதல் !!

July 10, 2020

தைவான் மிக நீண்ட காலமாகவே சீனாவிடம் இருந்து அச்சுறுத்தல்களை சந்தித்து உள்ளது, தற்போது இது பன்மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் தைவான் தன்னால் இயன்ற அளவுக்கு தனது ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இந்த நடவடிக்கையின் காரணமாக பல்வேறு புதிய ஆயுதங்கள், தளவாடங்கள் ஆகியவற்றை வாங்கியும், ஏற்கனவே தன்னிடம் உள்ளவற்றை மேம்படுத்தியும் வருகிறது. இதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிடம் இருந்து முன்னர் வாங்கிய பேட்ரியாட் 3 வான் பாதுகாப்பு அமைப்பின் ஏவுகணைகளை மேம்படுத்த […]

Read More

22 அபாச்சிகள் மற்றும் 15 சினூக் வானூர்திகளின் டெலிவரியை நிறைவு செய்த போயிங் நிறுவனம் !!

July 10, 2020

போயிங் நிறுவனம் இந்திய விமானப்படைக்கு மொத்தமாக 22 அபாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்கள் மற்றும் 15 சினூக் ஹெலிகாப்டர்கள் வழங்கும் ஒப்பந்தத்தை பெற்றிருந்தது. தற்போது 22 அபாச்சிகளில் கடைசி 5 ஹெலிகாப்டர்களையும் மீதமுள்ள சினூக் ஹெலிகாப்டர்களையும் இந்திய விமானப்படையிடம் ஒப்படைத்து விட்டதாக அந்நிறுவனம் அறிக்கை வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளது. இந்த ஹெலிகாப்டர்களின் மூலமாக நாட்டின் பாதுகாப்பு பன்மடங்கு வலுப்பட்டு இருப்பதை மறுக்க முடியாது.

Read More

மலாக்கா ஜலசந்தி மூலம் இந்தியா சீனாவுக்கு எத்தகைய பாதிப்பை வரும் காலங்களில் உண்டு பண்ணலாம் – ஒர் அலசல் !!

July 10, 2020

மிக நீண்ட காலமாகவே சீனா கடல்வழி போக்குவரத்தை தனது ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு நம்பியுள்ளது. இதில் மிக முக்கிய பங்கு வகிப்பது இந்தோனேசியா மற்றும் மலேசியா இடையில் உள்ள மலாக்கா ஜலசந்தி ஆகும். 1990களுக்கு பிறகான காலகட்டத்தில் இதன் பயன்பாடும் முக்கியத்துவமும் ஒருசேர பன்மடங்கு அதிகரித்தது. இந்த வழியாக தான் தற்போதும் வளைகுடா நாடுகள், அங்கோலா மற்றும் வெனிசுவேலா நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறது. தற்போது இந்தியா சீனா இடையே மோதல்கள் அதிகரிக்கும் போது மலாக்கா […]

Read More

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உட்பகுதிகளுடன் எல்லை பகுதிகளை இணைக்கும் 6 பாலங்கள் விரைவாக கட்டி முடித்து சாதனை !!

July 10, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூர் பல்லன்வாலா சாலையில் 4 பாலங்களும், கத்துவா மாவட்டத்தில் தாரா நல்லா பாதையில் 2 பாலங்களும் சரியான காலக்கெடுவிற்குள் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பு கட்டி முடித்து சாதனை புரிந்துள்ளது. நேற்று மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் காணோளி வாயிலாக இந்த பாலங்களை திறந்து வைத்து நாட்டுக்கு அர்பணித்தார். அப்போது உடன் தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே மற்றும் எல்லையோர சாலைகள் கட்டுமான அமைப்பின் தலைவர் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹர்பால் சிங் […]

Read More

பாக் ரேஞ்சர் அதிகாரியை வீழ்த்திய சிந்து தேச புரட்சி ராணுவம் !!

July 10, 2020

பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையை சேர்ந்த ஆஷிக் எனும் அதிகாரியை கராச்சி நகரில் சிந்து தேச புரட்சி ராணுவம் வீழ்த்தியுள்ளது. வீழ்த்தப்பட்ட ரேஞ்சர்ஸ் அதிகாரி ஆஷிக் சிந்து தேச விடுதலை போராளிகளை பற்றி தகவல் திரட்டும் பணியிலும், பல சிந்து தேச போராளிகளை கொடுரமாக வீழ்த்தியதிலும் பங்கு வகித்தவர் ஆவார். இதுகுறித்து சிந்து தேச புரட்சி படையின் செய்தி தொடர்பாளர் சோதோ சிந்தி கூறுகையில் ” சிந்து தேச விடுதலைக்கு எதிராகவும் சிந்து மக்களின் இன அழிப்புக்கு காரணமானவர்களையும் […]

Read More

இந்திய பாகிஸ்தான் எல்லையில் நேபாளத்தை சேர்ந்த கோர்க்கா வீரர் வீரமரணம் !!

July 10, 2020

நேபாள நாட்டின் கந்தகி பிரதேஷ் பகுதியை சேர்ந்தவர் சம்புர் குருங், இவர் இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். நேற்று இரவு ஜம்மு காஷ்மீர் மாநிலம் நவ்ஷெரா செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் கோர்க்கா வீரர் சம்புர் குருங் படுகாயம் அடைந்த நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவரது உயிர் அங்கு பிரிந்தது. இதுகுறித்து பேசிய பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் லெஃப்டினன்ட் கர்னல் தேவேந்தர் ஆனந்த் சம்புர் குருங் மிகவும் […]

Read More

கல்வான் மீதான சீனாவின் உரிமை கோரலை மீண்டும் நிராகரித்த இந்தியா !!

July 10, 2020

படிப்படியாக எல்லையில் படைகுறைப்பு இருதரப்பிலும் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மீண்டும் சீனாவின் உரிமை கோரலை நிராகரித்து உள்ளது. இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா பேசுகையில் ” எல்லை நிலவரம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் அனைத்தும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டியவை ஆகும், ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் இறையாண்மையை பாதிக்கும் எந்த செயலையும் இந்தியா அனுமதிக்காது” என்றார். மேலும் அவர் பேசுகையில் இந்திய சீன எல்லையோரம் அமைதி […]

Read More

சீனாவுக்கெதிரான பலம்: 105 எப்-35 ஐந்தாம் தலைமுறை விமானங்கள் வாங்கும் ஜப்பான்

July 10, 2020

சீனாவுக்கெதிராக தனது படை பலத்தை அதிகரிக்கும் வண்ணம் அமெரிக்காவிடம் இருந்து 105 F-35 ஸ்டீல்த் ஐந்தாம் தலைமுறை விமானங்களை சுமார் $23.11 பில்லியன் டாலர்கள் செலவில்பெற உள்ளது. 63 F-35A விமானங்கள் மற்றும்  42 F-35B விமானம் தாங்கி கப்பலில் இருந்து பறக்கும் ரக விமானங்களை பெற உள்ளது.இது குறித்து கூறியுள்ள அமெரிக்கா ஆசிய பசிபிக் பகுதியின் முக்கிய கூட்டாளியான ஜப்பானின் படை பலத்தை இது அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. ஜப்பானுடைய 2020/2021க்கான பாதுகாப்பு நிநி $50.3 […]

Read More

பாகிஸ்தான் தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம்

July 10, 2020

காஷ்மீரின் ராஜோரி பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாக் இராணுவம் அத்துமீறி தாக்குதலில் இராணுவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார். இராஜோரி மாவட்டத்தின் நௌசேரா செக்டாரில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இரவு 12.30மணிக்கு தாக்குதலை தொடங்கிய பாக் இராணுவம் கமால் ஏரியா பகுதியில் கடும் மோர்ட்டார் தாக்குதலை நடத்தியது.இதில் ஹவில்தார் எஸ் குருங் அவர்கள் படுகாயமடைந்துள்ளார். பின்பு மருத்துவமைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு வீரமரணம் அடைந்துள்ளார்.

Read More