Day: July 9, 2020

இந்தியா அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்குவதில் உள்ள சிக்கல்கள் என்ன?

July 9, 2020

தற்போது அமெரிக்கா மற்றும் ஃபிரானஸ் ஆகிய நாடுகள் தான் அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்கி வருகின்றன. இந்த இரு நாடுகளும் முறையே 11 மற்றும் 1 அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களை இயக்கி வருகின்றன. இந்தியா தனது கடற்படைக்கு இத்தகைய ஒரு விமானந்தாங்கி கப்பலை கட்டி பயன்படுத்தி கொள்வதில் பல சிக்கல்கள் உள்ளன அவற்றை பற்றி பார்க்கலாம். 65,000 டன்கள் எடை கொண்ட அணுசக்தியால் இயங்கும் விமானந்தாங்கி கப்பல்களில் இ.சி.எம், இ.எஸ்.எம் மற்றும் ஈமால்ஸ் உள்ளிட்ட […]

Read More

சீனாவுக்கு எதிராக அமெரிக்காவின் மேலதிக நடவடிக்கைகள் !!

July 9, 2020

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா மேலதிக நடவடிக்கைகளை எடுக்க தயாராகி வருவதாக வெள்ளை மாளிகை நிர்வாகம் தெரிவித்துள்ளது ஆனால் அது எத்தகைய நடவடிக்கைகள் ஆக இருக்கும் என்பது தெரிவிக்கப்படவில்லை. அமெரிக்கா மற்றும் சீனா இடையிலான உறவு கொரோனா, ஹாங்காங், தென்சீன கடல்பகுதியில் பிரச்சினை காரணமாக மிகவும் மோசமான நிலையை எட்டி உள்ளது. ஏற்கனவே சில நடவடிக்கைகளை சீனாவுக்கு எதிராக அமெரிக்கா எடுத்த நிலையில் தற்போது மேலதிக நடவடிக்கைகளை செயல்படுத்த தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களாகவே அமெரிக்க […]

Read More

பிரம்மாஸ் ஏவுகணை இந்தோனேசியாவிற்கு ஏற்றுமதி ??

July 9, 2020

கடந்த ஆண்டு முதலே இந்தோனேசியா நமது பிரம்மாஸ் ஏவுகணைகளை வாங்க ஆர்வம் காட்டி வருவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் தற்போது இந்தோனேசியாவுக்கு பிரம்மாஸ் ஏவுகணைகளை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. இந்தோனேசியா தனது கடலோர பாதுகாப்புக்கு 290 கிலோமீட்டர் தொலைவு வரை சென்று தாக்கும் பிரம்மாஸ் ஏவுகணைகள் மீதும், போர் விமானங்களில் கொண்டு சென்று தாக்க உதவும் “பிரம்மாஸ் ஏ” ரக ஏவுகணைகளை வாங்கவும் ஆர்வம் காட்டி உள்ளது. இந்த பிரம்மாஸ் ஏ ரக […]

Read More

அமெரிக்காவிற்கு சவால் விடுக்கும் எண்ணம் சீனாவுக்கு இல்லை : சீன வெளியுறவு அமைச்சர் பல்டி !!

July 9, 2020

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி அமெரிக்காவிற்கு சவால் விடுக்க சீனா ஒருபோதும் விரும்பியதில்லை என கூறி உள்ளதாக க்ளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் அமெரிக்கா மற்றும் சீனா இடையே தூதரக ரீதியான உறவு தோற்றுவிக்கப்பட்ட காலத்திற்கு பிறகு தற்போது தான் இருநாட்டு உறவுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகவும், தற்போது சீனாவை அமெரிக்காவின் எதிரியாக பல அமெரிக்கர்கள் கருதும் நிலைக்கு இது சென்றுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் அமெரிக்காவிற்கு போட்டியாகவோ அல்லது மாற்று […]

Read More

பிரம்மாஸ் ஒப்பந்தம் இறுதி கட்டத்தை நெருங்கும் இந்தியா – ஃபிலிப்பைன்ஸ் பேச்சுவார்த்தை !!

July 9, 2020

தென்சீன கடல்பகுதியில் நாளுக்கு நாள் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருகிறது.சீன கடற்படை பல நாடுகளுக்கு பிரச்சினை கொடுத்து வருகிறது. இந்த நிலையில் சீன கடற்படையை சமாளிக்க அப்பிராந்திய நாடுகள் நீர்மூழ்கிகள், போர்க்கப்பல்கள், போர் விமானங்கள் என புதிய ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை வாங்கி குவித்து வருகின்றன. அந்த வகையில் ஃபிலிப்பைன்ஸ் கடந்த சில ஆண்டுகளாகவே பிரம்மாஸ் ஏவுகணையில் அதீத ஆர்வம் காட்டி வந்தது. இந்த நிலையில் கடலோர பாதுகாப்புக்கு லாரியில் இருந்து ஏவப்படும் வகையிலான பிரம்மாஸ் ஏவுகணைகளின் […]

Read More

பாங்காங் ஸோ பகுதியில் முழுமையாக வெளியேறாத சீன ராணுவம் !!

July 9, 2020

பாங்காங் ஸோ ஏரியின் வடக்கு கரையில் அமைந்துள்ள ஃபிங்கர்4 பகுதியில் இருந்து சீன ராணுவம் முழுமையாக வெளியேறி ஃபிங்கர்5 பகுதிக்கு சென்றால் தான் பின்வாங்குதல் நடவடிக்கையின் முதல் கட்டம் நிறைவடையும். ஆனால் ஃபிங்கர்4 பகுதியில் மூன்று இடங்களில் இருந்து மட்டும் தான் சீன ராணுவம் பின்வாங்கி உள்ளது என கூறப்படுகிறது, அவர்கள் முழுவதுமாக வெளியேறி ஃபிங்கர்5 பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது தான் நடைமுறையில் ஒப்பு கொள்ளப்பட்ட விஷயம். தற்போது வரை சில கூடாரங்களை அகற்றியும், வாகனங்களை […]

Read More

பின்வாங்குகிறோம் என சொல்லிவிட்டு ஏமாற்றுமா சீனா : இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பு !!

July 9, 2020

ஏற்கனவே கல்வான் மற்றும் ஹாட் ஸ்ப்ரிங் பகுதிகளில் இருந்து பின்வாங்கி உள்ள சீன ராணுவம் மற்ற பகுதிகளில் இருந்தும் ஏமாற்றாமல் வெளியேறுகிறதா என இந்திய ராணுவம் தீவிரமாக கண்காணித்து வருகிறது. ஆனால் கல்வான் பகுதியில் அவர்கள் வெளியேறி செல்லும் பகுதியில் உள்ள மண்சாலை மீது வரும் நாட்களில் தார்சாலை இடப்பட்டாலோ அல்லது பனிக்காலத்திற்கு தேவையான பொருட்களை கொண்டு வர தொடங்கினாலோ சீனர்கள் வாக்குறுதியை மீறி விட்டனர் என கருத முடியும். கல்வானில் தற்போதைய நிலவரப்படி பிபி14, பிபி15 […]

Read More

பாக்கில் இராணுவ புரட்சியா? காணாமல் போகும் தளபதிகள்!

July 9, 2020

பாக்கில் இராணுவ புரட்சிக்கு அந்நாட்டு இராணுவம் தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 60 பாக் இராணுவ அதிகாரிகள் கைதாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.மேலும் பாக் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேசி மருத்துவக் காரணங்களுக்காக வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பதவி முடிந்த பின்பும் இம்ரான் கான் தற்போதுள்ள தளபதி பாஜ்வாவிற்கு மூன்று வருட பதவி நீட்டிப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. மூன்று லெப் ஜென் அளவிலான இராணுவ தளபதிகளும் கைதாகியுள்ளதாக தகவல்

Read More

எல்லைக் கோட்டின் தங்தார் செக்டாரில் பாக் தாக்குதல்

July 9, 2020

வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாட்டத்தின் தங்தார் செக்டாரில் பாக் இராணுவம் அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. தங்தார் செக்டாரில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் நேற்று ஜீலை 8,2020ல் பாக் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. மோர்ட்டார்கள் மற்றும் சிறிய ரக ஆயுதங்களை கொண்டு பாக் படைகள் தாக்குதல் நடத்தியுள்ளன.இதற்கு இந்தியா சார்பில் கடுமையாக பதிலடி கொடுக்கப்பட்டதாக இந்திய இராணுவம் கூறியுள்ளது.

Read More