Day: July 2, 2020

சிறப்பு படைகளை எல்லைக்கு அனுப்பும் இந்திய இராணுவம்-சிறப்பு தகவல்கள்

July 2, 2020

இந்தியா சீனப் பிரச்சனை எந்நேரத்திலும் மோதலாக வெடிக்க சாத்தியமுள்ள இந்த நேரத்தில் இந்திய இராணுவம் தனது சிறப்பு படைகளை எல்லை நோக்கி அனுப்பியுள்ளது. இந்திய இராணுவம் தனது பாரா சிறப்பு படை வீரர்களை நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து தற்போது லடாக் நோக்கி நகர்த்தப்பட்டுள்ளனர்.அங்கு ஏற்கனவே போர்பயிற்சிகள் நடைபெற்று வருகின்றன.எதிரி நாடுகளில் நுழைந்து அதிரடி தாக்குதல் நடத்தும் திறனுள்ள இந்த படைப் பிரிவு தான் மியான்மர் மற்றும் பாகிஸ்தானிற்குள் புகுந்து பயங்கரவாதிகளை வேட்டையாடியது. அனைத்து காலநிலைகளுக்கும்,அனைத்து விதமான […]

Read More

12 மணி நேர பேச்சுவார்த்தை; இருபுறமும் வெளியேற நடவடிக்கை ?

July 2, 2020

எல்லையில் இரு நாட்டு வீரர்கள் மோதிக்கொண்டதற்கு பிறகு இரு நாட்டு இராணுவமும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றன.கடைசியாக நடைபெற்ற 12 மணி நேர பேச்சுவார்த்தையில் கல்வான் மற்றும் கோக்ரா-ஹாட் ஸ்பிரிங் ஏரியாவில் இருந்து படைகளை பின்வாங்க இருபுறமும் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பகுதி பகுதியாக இந்த படைக்குறைப்பு நடைபெற இரு நாட்டு இராணுவமும் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இந்திய பகுதியான சூசுல் என்னுமிடத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது. எல்லைப் பிரச்சனை தொடர்பாக நடைபெற்ற மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.இதற்கு […]

Read More

முக்கியச்செய்தி: சுகாய் மற்றும் மிக் விமானங்கள் வாங்க கொள்முதல் கூட்டத்தில் அனுமதி

July 2, 2020

இந்திய விமானப்படைக்காக புதிய 12 Sukhoi-30MKI விமானங்கள் மற்றும் 21 MiG-29UPG விமானங்கள் வாங்க இராணுவ கொள்முதல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த புதிய மிக் விமானங்கள் நேரடியாக இரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.மற்றும் சுகாய் விமானங்களை நமது ஹால் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும். இவை தவிர ஏற்கனவே படையில் உள்ள 59 மிக் விமானங்களை புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 38000 கோடிகள் அளவிலான தளவாடங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மிக்-29 விமானங்கள் புதுப்பித்தல் மற்றும் […]

Read More

காலிஸ்தான் பிரிவினையை உயிர்ப்பிக்க முயலும் 9 பேரை இந்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்தது !!

July 2, 2020

வெளிநாடுகளில் இருந்து கொண்டு இந்தியாவில் காலிஸ்தான் இயக்கங்களை உயிர்ப்பித்து பிரிவினைவாதத்தை தூண்ட 9 பேரின் பெயர்ப்பட்டியல் மத்திய அரசின் பார்வையில் இருந்தது. இவர்கள் காலிஸ்தான் இயக்கங்களை உயிர்ப்பிப்பதற்கு உதவியதன் அடிப்படையில் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுஉள்ளனர். அவர்களின் பெயர்கள்: 1) வாந்தவா சிங் பப்பார், பாகிஸ்தானை தளமாக கொண்டு இயங்கும் பப்பார் கால்ஸா இண்டர்நேஷனல் அமைப்பின் தலைவர். 2) லக்பீர் சிங்,பாகிஸ்தானை தளமாக கொண்ட சர்வதேச சீக்கிய இளைஞர்கள் கூட்டமைப்பு. 3) ரஞ்சித் சிங்,பாகிஸ்தனை தளமாக […]

Read More

காஷ்மீரில் மூன்று வயது குழந்தையை மீட்ட சி.ஆர்.பி.எஃப் வீரர் பவன் குமார் சொவ்பே !!

July 2, 2020

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபோர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பஷிர் அஹமது என்ற முதியவர் கொல்லப்பட்டார். தனது மூன்று வயது பேரனுடன் கடைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய போது அநியாயமாக அந்த சிறுவன் கண்ணெதிரே கொல்லப்பட்டார். இரத்தம் வழிய கிடந்த தனது தாத்தாவின் உடலின் மீது அச்சிறுவன் கதறி அழுது கொண்டிருந்தான். அப்போது அங்கு விரைந்து வந்த மத்திய ரிசர்வ் காவல்படையின் 179ஆவது பட்டாலியனை சேர்ந்த கோப்ரா கமாண்டோ வீரர் பவன் குமார் சொவ்பே […]

Read More

கல்வான் வீரர்களின் இழப்பை வெளியிட்டால் கட்சியிலும் ராணுவத்திலும் இருந்து ஜி ஜின்பிங்கிற்கு எதிராக கடும் எதிர்ப்பு உருவாகும் !!

July 2, 2020

சமீபத்தில் கல்வான் பள்ளதாக்கில் நடைபெற்ற மோதலில் சீன வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை மறைத்தது சீன ராணுவத்தில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக யாங் ஜியான்லி என்பவர் கூறியுள்ளார். மேலும் அரசு இறந்து போன வீரர்களை நடத்திய விதத்தால் ராணுவத்தில் உள்ள வீரர்களும் ஒய்வு பெற்ற வீரர்களும் போராட்டங்களை நடத்த உள்ளதாக தெரிகிறது அப்படி போராட்டங்களை நடத்தினால் அவர்களை சீன அரசு நிச்சயமாக ஒடுக்கும் அப்படி நிகழ்ந்தால் அரசுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் கிளர்ச்சி வெடிக்கலாம் எனவும், அத்தகைய […]

Read More

சீன செயலிகள் மீதான தடை தேசிய பாதுகாப்புக்கு நல்லது: அமேரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ !!

July 2, 2020

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்தியா சமீபத்தில் சீன செயலிகளை தடை செய்ததை பாராட்டி உள்ளார். அவர் இது பற்றி பேசுகையில் இந்த 59 செயலிகள் மீதான தடை பாராட்டுக்கு உரியது, இந்தியா தனது தேசிய பாதுகாப்பை உறுதி செய்து கொள்கிறது என்றார், மேலும் இந்த தடையானது இந்தியாவின் பாதுகாப்பு, இறையாண்மை, ஒற்றுமை ஆகியவற்றிற்கு மிகவும் நல்லது என்று கூறினார். இந்த 59 செயலிகளை தடை செய்வதற்கு பிரதான காரணமாக கூறப்படுவது தகவல் திருட்டு மற்றும் […]

Read More

சீனாவின் முரட்டுத்தனம் அதன் நீண்ட கால நடவடிக்கைகளுடன் ஒத்துப்போகிறது அதிபர் ட்ரம்ப் !!

July 2, 2020

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நேற்று செய்தியாளர்கள் இடையே பேசுகையில் இந்தியா மற்றும் சீனா இடையிலான எல்லை பிரச்சினையை மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறோம் என்றார். மேலும் அவர் பேசுகையில் சீனாவின் முரட்டுத்தனமான செயல்பாடுகள் இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் எல்லை விவகாரங்களில் அதன் நீண்ட கால செயல்பாடுகளுடன் பொருந்தி போகிறது, இத்தகைய செயல்பாடுகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தோற்றத்தை வெளிபடுத்துகிறது என்றார். முன்னதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ தற்காலத்தில் சீனாவின் விரிவாக்க கொள்கை […]

Read More

பூட்டான் உடனும் எல்லை பிரச்சினையை தொடங்கிய சீனா !!

July 2, 2020

சீனா தொடர்ந்து மண்ணாசை காரணமாக பல நாடுகளுடன் எல்லை பிரச்சினையில் ஈடுபட்டு வரும் நேரத்தில் தற்போது பூட்டானையும் சீண்டி பார்க்கிறது. உலக சுற்றுச்சூழல் அமைப்பு உலகின் பல பகுதிகளில் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த அத்திட்டங்கள் சார்ந்த நாடுகளுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற சந்திப்பில் பூட்டானில் இந்திய சீன எல்லையோரம் உள்ள ட்ராஷிகாங் மாவட்டத்தில் சாக்டெங் வன சரணாலயம் அமைப்பதற்கு உதவுவது பற்றிய ஆலோசனை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சீனா அந்த […]

Read More

நாளை பாதுகாப்பு அமைச்சர் மற்றும் தரைப்படை தளபதி ஆகியோர் லடாக் விசிட் !!

July 2, 2020

நாளைய தினம் அதாவது வெள்ளிக்கிழமை இந்திய தரைப்படை தலைமை தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவாணே மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் லடாக் சென்று ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். சீனா பேச்சுவார்த்தை மூலமாக சுமுகமான முறையில் முடித்து கொள்வோம் என சொல்லி கொண்டே தெப்ஸாங், பாங்காங் ஸோ உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே கடந்த மாதம் 25ஆம் தேதி ஜெனரல் நரவாணே லடாக் விசிட் மேற்கொண்டு ஆய்வு […]

Read More