Day: July 1, 2020

எல்லையில் தென்படும் சீனாவின் புதிய Z-8G வானூர்திகள்

July 1, 2020

இந்திய-சீன எல்லை அருகே சீன இராணுவம் போர்பயிற்சிகள் நடத்தி வருகின்றன.இந்நிலையில் சீனாவின் புதிய Z-8G போக்குவரத்து வானூர்திகள் எல்லையில் அடிக்கடி தென்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சீன இராணுவத்தின் 76வது குழுவில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய வானூர்திகள் சீன இராணுவம் நடத்தி வரும் போர்பயிற்சிகளில் பங்கேற்று வருகிறது. பீடபூமி ஆபரேசன்களில் செயல்படுவதற்கு ஏற்றவை இந்த வானூர்திகள் என குளோபல் டைம்ஸ் கூறியுள்ளது.சீன இராணுவத்தில் செயல்பாட்டில் உள்ள பெரிய வானூர்திகளில் இதுவும் ஒன்று ஆகும். 30 வீரர்கள் அல்லது ஐந்து […]

Read More

இந்தியாவில் இனி போக்குவரத்து துறையில் சீன நிறுவனங்கள் முடக்கப்படும் : மத்திய அரசு !!

July 1, 2020

மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் நிதின் கட்காரி இந்தியாவில் இனி போக்குவரத்து துறையில் சீன நிறுவனங்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்படாது என கூறியுள்ளார். போக்குவரத்து கட்டுமான ஒப்பந்தங்களில் சீன நிறுவனங்கள் நேரடியாகவோ அல்லது கூட்டு ஒத்துழைப்பு வழியாகவோ பங்கேற்க அனுமதி அளிக்கபடாது எனவும் இதற்கு நாங்கள் உறுதி பூண்டுள்ளோம் எனவும் கூறினார். மேலும் பேசுகையில் சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், சிறு குறு நடுத்தர தொழில்களில் சீன நிறுவனங்களை […]

Read More

இந்தியாவில் தயாரிக்கப்பட உள்ள 21 மிக்29 போர் விமானங்கள் !!

July 1, 2020

இந்திய விமானப்படைக்கு மிக் நிறுவனம் 21 மிக்29 விமானங்களின் உடல்பகுதியை விற்க உள்ளதாக அந்நிறுவனத்தின் தலைவர் இல்யா தராசென்கோ கூறியுள்ளார். 20 வருடக்களுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட இந்த உடல்பகுதிகளை அப்போது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்ட காரணத்தால் அப்படியே வைத்துள்ளனர். தற்போது இந்திய விமானப்படையின் தேவையை கருத்தில் கொண்டு அவற்றை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த விமான உடல்பகுதிகள் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனத்தால் இந்தியாவிலேயே மிக்29யுபிஜி தரத்திற்கு கட்டமைக்கப்பட உள்ளது. இந்த விமானங்கள் அடுத்த 30வருடங்களுக்கு […]

Read More

ஊடுருவ முயன்ற பயங்கரவாதியை சுட்டு வீழ்த்திய ராணுவம் !!

July 1, 2020

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டம் பிம்பர் காலி செக்டாரில் சிலர் ஊடுருவ முயற்சிப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டது. உடனே அப்பகுதிக்கு விரைந்த வீரர்கள், இன்று காலை 5.55மணிக்கு சுமார் 400மீட்டர் உள்நுழைந்த பயங்கரவாதிகளை கண்டுபிடித்த பாதுகாப்பு படையினர், அவர்களை மடக்கினர். அப்போது நடைபெற்ற சண்டையில் 1 பயங்கரவாதி கொல்லப்பட்டான், பதுங்கி இருக்கும் மற்ற பயங்கரவாதிகளை கண்டுபிடிக்க தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது.

Read More

நம்பத்தகுந்த பாரக்-8 ஏவுகணையை எல்லைக்கு நகர்த்தும் நமது பாதுகாப்பு படைகள்

July 1, 2020

இஸ்ரேலிய பாதுகாப்பு படை வசமிருக்கும் பாரக்-8 ஏவுகணையை இந்திய பாதுகாப்பு படைகள் பெற்று சீனாவுக்கு எதிராக இந்திய எல்லைக்கு நகர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.அவரச நடவடிக்கையாக இஸ்ரேலிடமிருந்து இந்த அமைப்புகள் பெறப்பட்டு எல்லைக்கு நகர்த்தபடுகிறது.ஏற்கனவே இந்திய தயாரிப்பு ஆகாஸ் ஏவுகணைகளும் எல்லைக்கு நகர்த்தப்பட்டுள்ளது. LR-SAM எனப்படும் இந்த பாரக்-8 ஏற்கனவே கடற்படையில் பயன்படுத்தப்படும் வான் பாதுகாப்பு ஏவுகணையின் தரைப்படை வகை ஆகும்.விமானங்கள்,கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்,ஆளில்லா விமானங்கள் ஆகியவற்றை வானிலேயே தடுத்து அழிக்ககூடியது இந்த பாரக்-8 ஏவுகணை. இந்த […]

Read More

பாங்காங் ஸோ ஏரிக்கு அதிவேக கண்காணிப்பு படகுகளை அனுப்பும் இந்தியா !!

July 1, 2020

இந்த வாரம் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரிக்கு மேலதிக அதிவேக படகுகளை அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த படகுகள் இந்திய கடற்படைக்கு சொந்தமானவை ஆகும், மேலும் இவை அதிக வலிமைக்காக இரும்பு சட்டத்தால் கட்டமைக்க பட்டவை ஆகும். இந்த படகுகள் இந்திய விமானப்படையின் சி17 போக்குவரத்து விமானங்கள் மூலமாக லடாக் கொண்டு செல்லப்பட உள்ளன. மொத்தம் இத்தகைய 12 படகுகளை அனுப்பவுள்ள இந்திய அரசு இவற்றை கொண்டு பாங்காங் ஸோ […]

Read More

பாங்காங் ஸோ பகுதி தங்களக்கு உரியது என சீனா நிறுவிய 80மீ அறிவிப்பு பலகை !!

July 1, 2020

கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஸோ ஏரி பகுதியில் சீன ராணுவம் 80மீட்டர் நீளம் கொண்ட அறிவிப்பு பலகை ஒன்றை நிறுவி உள்ளது. அதில் பாங்காங் ஸோ பகுதி தங்களுக்கு சொந்தமானது என சீன மாண்டரின் எழுத்துக்களால் எழுதப்பட்டுள்ளது. இந்த பலகை ஃபிங்கர்4 மற்றும் ஃபிங்கர்5 ஆகியவற்றிற்கு இடையே நிறுவப்பட்டுள்ளது. இதனை எளிதாக விமானங்கள் மற்றும் செயற்கைகோள்கள் வாயிலாக காணும் வகையில் சீனர்கள் நிறுவி உள்ளனர். இந்த புதிய அத்துமீறல் கொஞ்ச நாளைக்கு சீனா முரண்டு பிடிப்பதையோ […]

Read More

டோக்லாமில் இந்தியாவின் பதிலடியை எதிர்பார்க்காத சீனா : சீன வல்லுநர் யுன் ஸுன் !!

July 1, 2020

அமெரிக்காவில் உள்ள ஸ்டிம்சன் மையத்தில் கிழக்காசிய திட்டத்தின் இணை இயக்குனராக பணியாற்றுபவர் யுன் ஸுன், இவர் சீன விவகாரங்கள் நிபுணராவார். நேற்று இவர் இந்தியா டுடேவுக்கு அளித்த பேட்டியில் “டோகாலாமில் தனது நடவடிக்கைகளுக்கு இத்தனை தீவிரமாக இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கும் என்பதை சீனா சற்றும் எதிர்பார்க்கவில்லை” என்றார். இந்தியா பூட்டான் மற்றும் சீனா இடையே உள்ள மும்முனை சந்திப்பான டோக்லாம் பகுதி எதற்கும் பயனற்ற ஒரு பகுதி அந்த பகுதியில் சீனா கட்டுமான பணிகளை மேற்கொண்ட போது […]

Read More

லடாக் பகுதிக்கு 20000 வீரர்களை அனுப்பும் பாகிஸ்தான் இராணுவம்,பயங்கரவாத குழுவுடன் சீனா பேச்சுவார்த்தை

July 1, 2020

லடாக் பகுதியில் பதற்றத்தை குறைக்க இந்தியாவும் சீனாவும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வரும் வேளையில் பாக்கிஸ்தான் இராணுவம் தனது படைப்பிரிவுகளை கில்ஜீத்-பல்டிஸ்தான் பகுதிக்கு அனுப்பி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது தவிர சீன இராணுவம் பாக் பயங்கரவாத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. லடாக்கின் வடக்கு பகுதிக்கு கிட்டத்தட்ட 20000 வீரர்களை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.கிட்டத்தட்ட சீனா அங்கு நிலைநிறுத்தியுள்ள படைக்கு இணையானதாக இந்த படைகுவிப்பு உள்ளது.இந்திய இராணுவமும் இந்திய உளவு அமைப்பும் இந்த புதிய பிரச்சனை […]

Read More

வெட்டுக்கிளிகளை ஒழிக்க இந்திய விமானப்படை களமிறங்குகிறது !!

July 1, 2020

இந்திய விமானப்படை இந்தியாவில் பரவி வரும் வெட்டுக்கிளிகளை ஒழிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை தனது மி17 ஹெலிகாப்டர்களில் “ஏர்பார்ன் லோகஸ்ட் கன்ட்ரோல் சிஸ்டம்” அதாவது வான்வழி வெட்டுக்கிளிகள் கட்டுபடுத்துதல் அமைப்பு ஒன்றை நிறுவி உள்ளது. இந்த அமைப்பு மூலமாக ஒருமுறை பறக்கும் போதே சுமார் 750 ஹெக்டேர்களில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிக்க முடியும். இதன்மூலம் வெட்டுக்கிளிகளின் அட்டுழியத்தை அடக்க முடியும் என கூறப்படுகிறது.

Read More