லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தின் கடலோர நீர்மூழ்கிகள் !!

  • Tamil Defense
  • July 19, 2020
  • Comments Off on லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனத்தின் கடலோர நீர்மூழ்கிகள் !!

லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனம் ஏற்கனவே இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படைக்கு கப்பல்கள் மற்றும் ரோந்து கலன்களை தயாரித்து வழங்குகிறது தெரிந்த விஷயம் தான்.

இதைத்தவிர கே9 வஜ்ரா, தன்னாட்சி திறன் கொண்ட ஆளில்லா கடலடி வாகனங்கள் மற்றும் எதிர்கால காலாட்படை சண்டை வாகனம் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் இந்திய கடற்படைக்கு கடலோர நீர்மூழ்கிகள் தயாரிக்க விருப்பம் தெரிவித்துள்ளது.

இந்த கடலோர நீர்மூழ்கிகள் (COASTAL SUBMARINES) மிக சிறிய ஆனால் லாவகமாக ஆழம் குறைந்த பகுதிகளில் இயங்கும் திறன் கொண்டவை.

இவற்றால் நீண்ட தூரம் மற்றும் நீர்மூழ்கிகளை போல் கடலுக்கு செல்ல முடியாது ஆனால் கடலோர பகுதிகளில் துறைமுக பகுதிகளில் ரோந்து செல்ல இவை உதவும்.

மேலும் இவற்றால் கடலடியில் தரைப்பரப்பில் தங்கி இருந்து கண்காணிக்க முடியும், ஆழமற்ற பகுதிகளில் எந்த விபத்தும் ஏற்படாமல் பயணிக்க தகுந்த அதிநவீன கருவிகள் வழிகாட்டி அமைப்புகள் இருக்கும்.

இதில் உள்ள ஆயுத அமைப்புகள் பற்றிய எந்தவித தகவலும் தற்போது இல்லை.

இத்தகைய நீர்மூழ்கிகளை நமது கடற்படையில் இணைத்தால் கடலோர பகுதிகளை நன்கு கண்காணிக்க முடியும் மற்ற கலன்களை இன்னும் அதிக தொலைவிற்கு அனுப்பி நமது பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்.