
தைவான் ராணுவம் டைச்சுங் பகுதியில் சீன ஆக்கிரமிப்பை தடுக்கும் வகையிலான பிரமாண்ட ராணுவ பயிற்சிகளை மேற்கொண்டன.
தைவானுடைய முப்படைகளும் கலந்து கொண்ட இந்த 5 நாட்கள் போர் ஒத்திகையின் இறுதி நாளான நேற்று ஒரு விபத்து நிகழ்ந்துள்ளது.
தைவானிய ராணுவத்திற்கு சொந்தமான பெல் 0H 58D ரக ஹெலிகாப்டர் சின்ச்சு விமானப்படை தளத்தில் தரை இறங்கும் போது விழுந்து நொறுங்கியது.
இந்த விபத்தில் அந்த ஹெலிகாப்டரை இயக்கிய மேஜர் சியென் ஜென் சுவான் மற்றும் கேப்டன் காவோ சியா லுங் ஆகியோர் வீர மரணம் அடைந்தனர்.
இவர்களின் இறப்பிற்கு அந்நாட்டு அதிபர் சாய் இங் வென் இரங்கல் தெரிவித்துள்ளார்.