இந்திய மியான்மர் எல்லையில் கண்ணிவெடி தாக்குதல்; 3 வீரர்கள் வீரமரணம் !!

  • Tamil Defense
  • July 30, 2020
  • Comments Off on இந்திய மியான்மர் எல்லையில் கண்ணிவெடி தாக்குதல்; 3 வீரர்கள் வீரமரணம் !!

இந்திய மியான்மர் எல்லையோர பகுதியில் அஸ்ஸாம் ரைஃபிள்ஸ் வீரர்கள் பகுதி ஆதிக்க ரோந்து (ADP – AREA DOMINATION PATROL) முடித்து கொண்டு முகாமுக்கு திரும்பினர்.

அப்போது சான்டெல் அருகே அவர்கள் வாகன காண்வாய் வந்த போது கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியது, இதில் 3 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

இதனையடுத்து சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர், இந்த தாக்குதலில் 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர்.

வீரமரணம் அடைந்த வீரர்கள் முறையே மணிப்பூர், அஸ்ஸாம் மற்றும் நாகலாந்து ஆகிய மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த தாக்குதலை மணிப்பூரை சேர்ந்த மக்கள் விடுதலை ராணுவம் எனும் பயங்கரவாத குழு நடத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2015ஆம் ஆண்டு இதே மாவட்டத்தில் தான் டோக்ரா ரெஜிமென்ட் மீதான தாக்குதலில் 18 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர், அதை தொடர்ந்து மியான்மரில் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் தாக்குதல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.