இந்தியாவை ரயில்வே திட்டத்தில் இருந்து வெளியேற்றிய ஈரான் !!

  • Tamil Defense
  • July 15, 2020
  • Comments Off on இந்தியாவை ரயில்வே திட்டத்தில் இருந்து வெளியேற்றிய ஈரான் !!

நான்கு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவும் ஈரானும் சாபஹார் துறைமுகத்தில் இருந்து ஆஃப்கானிஸ்தான் எல்லையோரம் உள்ள ஸாஹேதான் பகுதிக்க ரயில் பாதை அமைக்க ஒப்பந்தம் செய்து கொண்டன.

தற்போது இந்தியா நிதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக கூறி இந்தியாவை வெளியேற்றி விட்டு தானாகவே இத்திடத்தை செயல்படுத்த ஈரான் முடிவு செய்துள்ளது.

கடந்த வாரம் ஈரானிய போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சர் மொஹம்மது எஸ்லாமி இத்திடத்தை துவக்கி வைத்தார். அந்நாட்டு அரசு வட்டார தகவல்களின் படி இத்திட்டம் ஆஃப்கானிஸ்தானில் உள்ள ஸரன்ஜ் பகுதி வரை நீட்டிக்கப்படும் என தெரிகிறது.

இப்பணிகள் வருகிற 2022 ஆம் ஆண்டு முடிவடையும் எனவும், ஈரானுடைய தேசிய வளர்ச்சி நிதியில் இருந்து ஏறத்தாழ 400மில்லியன் டாலர்கள் மதிப்பிலான நிதி பயன்படுத்தப்படும் என தெரிகிறது.

கடந்த 2016ஆம் ஆண்டு பிரதமர் மோடி.ஈரான் சென்ற போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது அதன் படி ஈரான் ரெயில்வே நிறுவனமும் இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனமும் இணைந்து இப்பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இந்திய ரயில்வே நிறுவனம் தேவையான உபகரணங்கள் உள்கட்டமைப்பை சுமார் 1.6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவில ஏற்படுத்தி தருவதாக வாக்குறுதி அளித்தது.

ஆனால் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நிலவும் பிரச்சினை மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் காரணமாக இந்தியா சிறிது காலம் தாழ்த்தி வந்ததும் ஈரான் அரசு இம்முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

ஆனால் இத்திட்டத்தில் இந்திய ரயில்வே மீண்டும் இணைய வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தம் ஈரானுடைய சாபஹார் துறைமுகத்தில் இருந்து மத்திய ஆசியாவுக்கு புதிய பாதையை அமைக்கும் இந்தியா, ஈரான் மற்றும் ஆஃப்கானிஸ்தான் கடையேயான முத்தரப்பு ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.