அமெரிக்க கடற்படையின் முன்னனி போர்க்கப்பல்களில் ஒன்று யு.எஸ்.எஸ். போன்ஹாமி ரிச்சர்ட். இது ஒரு நிலநீர் போர்முறை கப்பலாகும்.
சான் டியகோ கடற்படை தளத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டு இருந்த கப்பலில் ஞாயிற்றுக்கிழமை மாலை மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
வழக்கமாக சுமார் 1000த்திற்கும் அதிகமான வீரர்கள் பணியாற்றும் இந்த கப்பலில் அந்த நேரம் 160வீரர்கள் மட்டுமே இருந்தனர் இநனால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
கரும்புகையை சுவாசித்த 18 வீரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.
இது குறித்து ஒரு மூத்த கடற்படை அதிகாரி ஒருவர் பேசுகையில் கப்பலில் பத்து லட்சம் கேலன் அளவுக்கு எரிபொருள் இருப்பதாகவும் அதற்கு எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் கூறினார்.
சுமார் 18மணி நேரமாக தீ பற்றி எரிந்து வரும் கப்பலில் தீயை அணைக்க அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளதாகவும் அமெரிக்க கடற்படை கூறியுள்ளது.
அதே நேரத்தில் இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.