
மேற்கு வங்க மாநிலம் வங்காளதேச எல்லையோரம் அமைந்துள்ள வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த 22 வயது கல்லூரி மாணவி ஒருவர் தேசிய புலனாய்வு முகமையால் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மெளலானா ஆசாத் அரசு கல்லூரியின் மாணவி ஆவார்.
கைது செய்யப்பட்ட தானியா பர்வீன் பாகிஸ்தானில் உள்ள பலருடன் தொடர்பில் இருந்துள்ளார் அவர்களில் ஹஃபீஸ் சயீத்தும் ஒருவர் ஆவார்.
இந்த பெண் உளவாளியை பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ ஹனி ட்ராப் முலமாக பல அதிகாரிகளிடம் முக்கிய தகவல்களை பெற பயன்படுத்தி கொண்டதாக தேசிய புலனாய்வு முகமை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
சுமார் ஒரு வருட கால கண்காணிப்பிற்கு பின்னர் தானியா பர்வீன் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், தற்போது 10நாள் விசாரணை காவலில் உள்ளதாகவும் தெரிகிறது.