மொத்த கல்வான் பள்ளத்தாக்கும் எங்களுடையது-சீனா

  • Tamil Defense
  • June 20, 2020
  • Comments Off on மொத்த கல்வான் பள்ளத்தாக்கும் எங்களுடையது-சீனா

எப்போதும் இந்திய கட்டுப்பாட்டில் இருந்த கல்வான் பள்ளதாக்கு பகுதியை தற்போது சீனா முழுதாக தங்களுடையது என கூறியுள்ளது.கடந்த வெள்ளி அன்று சீன வெளியுறவு அமைச்சகம் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு பல்வேறு உலக நாடுகள் வருத்தம் தெரிவித்தும் வரும் வேளையில் இந்த செய்தியை சீனா வெளியிட்டுள்ளது.இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்ததற்கு அமெரிக்கா,இங்கிலாந்து,பிரான்ஸ்,ஜெர்மனி,ஜப்பான் மற்றும் மாலத்தீவு ஆகிய நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன.

கல்வான் பள்ளத்தாக்கு எல்லையில் சீனப் பக்கம் அமைந்துள்ளது என சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் ஷாவோ லிஜியன் கூறியுள்ளார்.
பல வருடங்களாக சீன வீரர்கள் இந்த பகுதியை ரோந்து செய்து வருகின்றனர் எனவும் கூறியுள்ளார்.இந்த ஏப்ரலில் திடீரென இந்தியா அங்கு பாலங்கள் மற்றும் ரோடுகள் என அத்துமீறி கட்டுமானங்கள் செய்து வருகின்றது என கூறியுள்ளார்.