
சில நாட்கள் முன்னர் கல்வான் பள்ளதாக்கில் இந்திய சீன வீரர்கள் மோதி கொண்டனர். இதை பற்றி கிடைத்த தகவலை இங்கு பதிவ செய்கிறோம்.
சீன வீரர்களின் ஆக்கிரமிப்பை அகற்றுமாறு கர்னல். சந்தோஷ் பாபு சீனர்களிடம் பேசிக்கொண்டு இருக்கையில் எதிர்பாராத விதமாக அவர் மீது சீனர்கள் தாக்குதல் நடத்தினர்.
ஆனாலும் சுதாரித்து கொண்ட அவர் வெறும் கைகளால் 3 சீன வீரர்களுடன் சண்டையிட்டார், 1 சீன வீரரை கொன்றும் ஒருவனை குருடாக்கினார். அதன் பின்னரே அவர் தாக்குதலில் வீரமரணமடைந்தார்.
இதனையடுத்து ஏற்கனவே சண்டையில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் சீனர்களை கோபத்துடன் தாக்க தொடங்கினர்.
தங்களது கட்டளை அதிகாரி கொல்லப்பட்டார் என அறிந்ததும் 16ஆவது பீஹார் படையணியின் “கட்டக் கமாண்டோ” வீரர்களும் அங்கு விரைந்து சென்றனர்.
நவீன ராணுவ வரலாற்றில் எங்கும் கேள்விப்படாத வெறும் கைகள், கற்கள், கம்பிகள், கத்திகள் கொண்ட மூர்க்கத்தனமான தாக்குதலை அங்கு சீனர்கள் சந்திக்க நேரிட்டது.
பீஹார் ரெஜிமென்ட்டின் போர் கோஷமான “பஜ்ரங் பாலி கி ஜெய்” “பிர்ஸா முண்டா கி ஜெய்” ஆகியவை விண்ணை பிளந்தன.
இந்திய வீரர்கள் வெறித்தனமாக சீன வீரர்கள் மீது பாய்ந்தனர். சுமார் 18 சீன வீரர்களின் கழுத்து உடைக்கபட்டது, பல சீன வீரர்களின் முகத்தில் கற்களை கொண்டு நமது வீரர்கள் வெறித்தனமாக தாக்கினர், அதில் பல சீன வீரர்களின் முகமே தெரியாத அளவுக்கு சிதைக்கப்பட்டது, இந்த வெறித்தனமான தாக்குதலை கண்டு பல சீன வீரர்கள் நடுங்கி போயுள்ளனர்.
சண டை ஒய்ந்த பின்னர் சீன வீரர்களின் உடல்களை மீட்க வந்த சீன ராணுவத்தினர் சிதறி கிடந்த சீன வீரர்களின் உடல்களை கண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றனர்.
தங்களது கட்டளை அதிகாரியை கொன்றும், மோசமான ஆயுதங்களை கொண்டும் தங்களை தாக்கிய சீனர்களை வெறித்தனமாக தாக்கி துவம்சம் செய்த நமது வீரர்கள் பாடம் புகட்டியுள்ளனர்.
வீரமரணமடைந்த வீரர்களுக்கு எமது சல்யூட் !!