காஷ்மீர் மீது படையெடுக்க முன்னாள் பாக் தூதரக அதிகாரி அறைகூவல் விடுப்பு !!

தில்லியில் பாக் தூதரகத்தில் பணியாற்றிய முன்னாள் பாக் தூதரக அதிகாரியான அப்துல் பாசித் சீனாவுடன் இணைந்து இருமுனை போர் தொடுத்து காஷ்மீரை மீட்க வேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளான்.

மேலும் அப்துல் பாசித் 370ஆவது சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்ட பின்னர், பாக் தரப்பு ராஜாங்க ரீதியாக மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியை தழுவியதாகவும், ஆகவே தற்போது ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் கடந்த 1962ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய சீன போரின் போது பாகிஸ்தானுக்கு காஷ்மீரை மீட்க வாய்ப்பு இருந்ததாகவும் ஆனால் அப்போது இந்தியாவுக்கு அமெரிக்க ஆதரவு இருந்த காரணத்தால் அது நடக்கவில்லை ஆகவே தற்போது லடாக்கில் நிலவும் சூழ்நிலையை பாகிஸ்தான் நேரடியாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அறைகூவல் விடுத்துள்ளார்.

பல பாகிஸ்தான் ராணுவ வல்லுநர்கள் இந்திய சீன போருக்கு சாத்தியக்கூறுகள் இல்லை ஆனால் கில்ஜித் பல்டிஸ்தான் மற்றும் பாக் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீட்க இந்தியா முயலும் என கருதுகின்றனர்.