
தற்போது இந்தியா சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நடைபெற்று வரும் எல்லைப் பிரச்சனை மிகுந்த கவலை தருவதாக உள்ளது எனவும் சீனா விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும் எனவும் அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க வெளிவிவகார அமைச்சகத்தின் ஹௌஸ் கமிட்டியின் சேர்மேன் எலியட் என்ஹெல் அவர்கள் வெளியிட்ட தகவல்படி சீனா எல்லை நாடுகளுடன் மோதலில் ஈடுபட்டு வருவதாகவும், அவற்றை சீனா சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு தீர்க்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.