
அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி மைக்கேல் பாம்பியோ அவர்கள் ஞாயிறு அன்று, சீன இராணுவம் ஏற்படுத்தும் அச்சுறுத்துதல்களுக்கு எதிரான இந்தியா உட்பட பல உலக நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட முடியும் என கூறியுள்ளார்.
சீனா தனது இராணுவ பலத்தை அதிகரிப்பதிலேயே குறியாக உள்ளது.சீன அச்சுறுத்தல் குறித்து அறிய இராணுவ அமைச்சகம் அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது.
இந்த அச்சுறுத்தல்களில் இருந்து அமெரிக்க விருப்பங்களை பாதுகாக்க அரசு அனைத்து முயற்சியும் எடுத்து வருகிறது.இவ்வாறு சீன அச்சுறுத்தலை சமாளிக்க இந்தியா,ஆஸ்திரேலியா,தென் கொரியா ,ஜப்பான் ,பிரேசில் மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் இணைந்து செயல்பட முடியும் என மைக் பாம்பியோ கூறியுள்ளார்.