ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது அமெரிக்க விமானப்படை குண்டுவீச்சு – அமைதி ஒப்பந்தம் என்னவாகும் ??

  • Tamil Defense
  • June 6, 2020
  • Comments Off on ஆஃப்கானிஸ்தானில் தலிபான்கள் மீது அமெரிக்க விமானப்படை குண்டுவீச்சு – அமைதி ஒப்பந்தம் என்னவாகும் ??

சில மாதங்கள் முன்னர் தலிபான்கள் மற்றும் அமெரிக்க அரசு ஆகியவை சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டன. இதில் முக்கியமான ஒரு நிபந்தனை தலிபான்கள் ஆஃப்கன் படைகளை தாக்க கூடாது என்பதாகும்.

ஆனால் தலிபான்கள் ஆஃப்கன் படைகள் மீது தாக்குதல் நடத்த திட்டம் தீட்டிய நிலையில் அமெரிக்க விமானப்படை குண்டு வீசி தாக்குதல் நடத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அமெரிக்க ராணுவ செய்தி தொடர்பாளர் கர்னல் ஸான்னி லெகார்ட் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவலின்படி ஆஃப்கானிஸ்தானுடைய மேற்கு பகுதியில் உள்ள ஃபராஹ் மாகாணத்தில் ஆஃப்கன் படைகள் மீது தாக்குதல் நடத்த தயாராக இருந்த 25 தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் கந்தஹார் மாகாணத்திலும் இது போன்ற மற்றோர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.