
இனி வரப்போகும் எஸ்500 மற்றும் மேம்படுத்தப்பட்ட எஸ்400, பெரெஸ்வெட் லேசர் அமைப்பு ஆகியவை ஹைப்பர்சானிக் ஆயுதங்களை வீழ்த்தும் ஆற்றலை கொண்டிருக்கும் என ரஷ்ய வான் பாதுகாப்பு மியூசியத்தின் இயக்குனர் யூரி க்ராட்டோவ் கூறியுள்ளார்.
மேலும் டிம்ட்ரி கோர்னெவ் எனும் ரஷ்ய பாதுகாப்பு வல்லுநர் பேசுகையில் ஹைப்பர்சானிக் ஏவுகணையை வீழ்த்த வேண்டுமானால் அதற்கான ஆயுதங்கள் மிகுந்த ஆற்றல் கொண்டதாக இருக்க வேண்டும்.
அதற்கு அதிக சக்தி வாய்ந்த ரேடார், அதி வேக ஏவுகணைகள், உயர் திறன் கொண்ட கணிணி அமைப்புகள், போலிகளையும் உண்மையான இலக்குகளையும் பகுத்தறியும் திறன் கொண்ட அதிநவீன கணிணிகள் போன்றவை இதற்கு தேவை என்றார்.
நிச்சயமாக இத்தகைய ஆயுத அமைப்புகள் வான் பாதுகாப்பு அமைப்புகளில் புதிய அத்தியாயத்தை தொடங்கி வைக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.