
இந்திய சீன எல்லையில் லடாக் பகுதியில் ஜீன் 16 அன்று இரு நாட்டு வீரர்களும் மோதிக்கொண்டனர்.இதில் இரு பக்கமும் பலத்த உயிர்சேதம் ஏற்பட்டது.இந்நிகழ்வு குறித்து கவலை தெரிவித்துள்ள ஐநா இரு நாடுகளும் அதிகபட்ச பொறுமையுடன் செயல்பட வலியுறுத்தியுள்ளது.
இந்த தாக்குதல்களில் இந்தியா பக்கம் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் தான் இந்த மோதல்கள் நிகழ்ந்துள்ளது.
சீனா பக்கம் காயமடைந்தவர்கள் உட்பட 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய-சீன எல்லையில் இருந்து வரும் தகவல்கள் கவலை தருவனவாக உள்ளன எனவும் இரு நாடுகளும் அமைதி காக்க வேண்டும் எனவும் ஐநா கூறியுள்ளது.