காஷ்மீரில் இரு ஐஎஸ் பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • June 30, 2020
  • Comments Off on காஷ்மீரில் இரு ஐஎஸ் பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

காஷ்மீரில் காலை தொடங்கிய என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளை நமது இராணுவ வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

யூனியன் பிரதேசமான காஷ்மீரின் அனந்தநாக்கின் வாகமா பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

இரண்டு பயங்கரவாதிகளும் ஐஎஸ் காஷ்மீர் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள்.முன்னதாக பயங்கரவாதிகள் இருப்பு குறித்த தகவல்கள் பாதுகாப்பு படைகளுக்கு கிடைக்க சிஆர்பிஎப்,காஷ்மீர் காவல்துறை மற்றும் இராஷ்டீரிய ரைபிள்ஸ் இணைந்த பாதுகாப்பு குழு பயங்கரவாதிகளின் இருப்பிடத்தை சுற்றி வளைத்து தாக்கின.

இதில் ஜாகித் தாஸ் என்ற பயங்கரவாதி உட்பட இரு பயங்கரவாதிகள் வீழ்த்த பட்டுள்ளனர்.