பதான்கோட் நகர காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தபோது ஒரு லாரியில் ஆயுதம் கடத்தி வந்த இருவரை கைது .
கைது செய்யப்பட்ட ஆமீர் ஹூசைன் வானி மற்றும் வாசிம் ஹசன் வானி ஆகியோரிடம் இருந்து 2 ஏகே47 ரக துப்பாக்கிகள், 60 கார்ட்ரிட்ஜுகள், 10 கையெறி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றை இவர்கள் பஞ்சாபிலிருந்து காஷ்மீருக்கு கடத்தியது தெரியவந்துள்ளது.
மேலும் விசாரணையின் போது முன்னாள் காஷ்மீர் காவல்துறை காவலர் இஷ்ஃபக் அஹமதுவிடம் இருந்து பெற்று கொள்ளும்படி இவர்களுக்கு உத்தரவு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு முன்னர் இதே போன்று 20லட்சம் ரூபாய் ஹவாலா பணத்தை காஷ்மீருக்கு பஞ்சாபில் இருந்து கடத்தியதும், ஒரு முறை 2 ஹிஸ்புல் முஜாஹிதீன் மற்றும் லஷ்கர் பயங்கரவாதிகளை காஷ்மீருக்கு கொண்டு சேர்த்ததும் தற்போது அவர்கள் உயிரோடு இல்லை எனவும் தெரிய வந்துள்ளது.