தில்லியில் பிடிப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளிகள் !!

  • Tamil Defense
  • June 1, 2020
  • Comments Off on தில்லியில் பிடிப்பட்ட ஐ.எஸ்.ஐ உளவாளிகள் !!

தில்லியில் நேற்று காவல்துறையினரால் சந்தேகத்திற்கு இடமான இருவர் கைது செய்யப்பட்டனர், அவர்கள் இந்தியர்கள் எனக்கூறி போலி ஆதார் அட்டைகளை சமர்பித்து தப்பிக்க முயற்சி செய்த நிலையில் போலி ஆதார் அட்டைகள் மாட்டி கொண்டன்.

அவர்களை மேலும் விசாரணை செய்ததில் அவர்கள் பாகிஸ்தானியர்கள் எனவும், தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் பணியாற்றி வருகின்றனர் எனவும் தெரிய வந்தது.

மேலும் விசாரணையில் அவர்கள் ஐ.எஸ்.ஐ உளவாளிகள் எனவும் இங்கு தூதரக பணியாளர்கள் எனும் அடையாளத்தோடு உளவு நடவடிக்கைகளில் ஈடுபட வந்தவர்கள் எனவும் தெரிய வந்துள்ளது.

அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு தெரிவிக்க மத்திய அரசு பாகிஸ்தான் அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது மேலும் அவர்களை இருவருக்கும் இந்தியாவில் இருப்பதற்கான அனுமதியை ரத்து செய்து வெளியேற்றும் நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இருவரின் பெயர்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன,
1) ஆபித் ஹூசைன்
2) தாஹீர் கான்
ஆகியோர் ஆவர்.