தில்லியில் ஐ.எஸ்.ஐ உளவாளிகளை கைது செய்ததின் எதரொலி; இந்திய அதிகாரிகளை கடத்தி பாக் போலி புகார்கள் கூறி பித்தலாட்டம் !!

  • Tamil Defense
  • June 15, 2020
  • Comments Off on தில்லியில் ஐ.எஸ்.ஐ உளவாளிகளை கைது செய்ததின் எதரொலி; இந்திய அதிகாரிகளை கடத்தி பாக் போலி புகார்கள் கூறி பித்தலாட்டம் !!

இன்று காலை பாக் தலைநகர் இஸ்லாமாபாத் நகரில் காணாமல் போன இந்திய தூதரக அதிகாரிகளை ஐ.எஸ்.ஐ கடத்தியுள்ளதாக தெரிகிறது.

அதாவது நமது அதிகாரிகள் இருவரும் ஒரு பாகிஸ்தானியரை வாகனத்தில் மோதிவிட்டு தப்ப முயன்றதாகவும் அதனையடுத்து பாக் காவல்துறை அவர்களை கைது செய்துள்ளதாகவும் பாக் தரப்பு கூறியுள்ளது.

கடந்த சில நாட்கள் முன்னர் தில்லியில் இரண்டு பாக் தூதரக அதிகாரிகள் (ஐ.எஸ்.ஐ அமைப்பினர்) உளவு நடவடிக்கையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு நமது தூதரக அதிகாரிகளை மர்ம நபர்கள் பின்தொடர்வது, வீட்டுக்கு வெளியில் நின்று கண்காணிப்பது, வாகனங்ளில் விரட்டி செல்வது போன்ற செயல்கள் அதிகரித்தன.

தற்போது இந்த கடத்தல் ஒரு பழிவாங்கும் நடவடிக்கை எனவும் பாகிஸ்தானிய ஐ.எஸ்.ஐ இன் பித்தலாட்டம் எனவும் மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.