
பாக்கிற்காக உளவு பார்த்ததாக இரு இந்தியர்களை இராஜஸ்தான் காவல்துறை கைது செய்துள்ளது.ஸ்ரீகங்காநகர் மற்றும் பைகனேர் ஆகிய இடங்களில் இந்த இருவர் கைது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவ உளவுத்துறை அளித்த தகவல்படி இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இராணுவ வெடிபொருள் கிடங்கில் பணிபுரிந்த சிவிலியன் பணியாளர் ஆன விகாஸ் குமார் மற்றும் மகஜன் பீல்டு துப்பாக்கி சுடு தளத்தின் சிவில் கான்ட்ராக்ட் உறுப்பினர் சிமான் லால் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முக்கியமாக புகைப்படங்களை சிமன் லால் பதிவு செய்து விகாஷ் குமாருக்கு அனுப்ப அந்த புகைப்படங்களை விகாஸ்குமார் பாக்கின் ஐஎஸ்ஐ-க்கு அனுப்பியுள்ளான்.
மகஜன் தளத்தற்கு பயிற்சிக்கு வரும் வீரர்கள் உட்பட இதுபோன்ற 100க்கும் மேற்பட்ட படங்களை உளவுத்துறைக்கு அனுப்பியுள்ளனர்.