மேஜர் அஜய் சிங் ஜஸ்ரோடியா

தனது உயிரை பணயம் வைத்து தனது வீரர்கள் உயிரை மீட்டவர். பள்ளிவயதில் தன் சகாக்களால் ராம்போ என அழைக்கப்பட்டவர்.

கார்கில் போரின் போது எதிரிகள் கைப்பற்றியிருந்த கார்கில்-லே சாலைக்கு அருகில் அமைந்திருந்த மிக உயரமான மலைப்பகுதியை கைப்பற்ற இவரது ஜம்மு காஷ்மீர் மற்றும் நாகா ரெஜிமென்ட் ,கார்வால் ரைபிள்ஸ் மூன்று பகுதிகளிலிருந்தும் அனுப்பப்பட்டது.

எதிரி ஆக்ரோச பலத்துடன் அனைத்து பலத்தயைும் கொண்டு மேலிருந்து படைகள் மீது இடைவிடாத ஆர்டில்லரி தாக்குதல் நடத்திகொண்டிருந்தார்.வீரர்கள் திகைத்தனர்.ஒரு ஆர்டில்லரி ஆறு வீரர்களை தாக்கி காயப்படுத்தியிருந்து.மேஜர் தனது மற்ற வீரர்களை பத்திரப்படுத்தி ஒற்றை ஆளாக சென்று காயம் பட்ட வீரர்களை மீட்க தொடங்கினார்.அவரும் பலத்த காயம் அடைந்தார்.

எதிரி தொடர்ந்து தாக்கிய வண்ணம் இருந்தான். பலத்த காயம அடைந்த மேஜர் இரத்தம் சொட்ட சொட்ட சக வீரர்களை மீட்டு கடைசியாக கண் மூடினார்.வீரமரணம் அடைந்தார்.

அவர் காப்பாற்றிய ஆறு வீரர்களும் பிறகு பிழைத்துக் கொண்டனர்.தன் உயிரிரையும் பொருட்படுத்தாமல் தன் வீரர்களை காப்பாற்றிய மேஜருக்கு சேனா விருது வழங்கப்பட்டது.

வீரவணக்கம்