நம்பமுடியாத வீரத்தின் விலைநிலமான கேப்டன் நெய்கிஸாகுவோ கெங்குரூஸ்

  • Tamil Defense
  • June 28, 2020
  • Comments Off on நம்பமுடியாத வீரத்தின் விலைநிலமான கேப்டன் நெய்கிஸாகுவோ கெங்குரூஸ்

காற்று அடிப்பதால் நமது கொடி பறப்பதில்லை,அதைக் காக்க வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் மூச்சுக் காற்றால் தான் பறக்கிறது.

இன்று கார்கில் வெற்றி தின கொண்டாடும் அதே வேளையில் நாம் நமக்காக வீரமரணம் அடைந்தவர்களை மறக்க கூடாது.அந்த வகையில் இன்று நாம் ஒரு வீரரின் வெற்றிச்சரித்திரத்தை காண உள்ளோம்.

வீரத்தின் வீரம்,நம்பமுடியாத வீரத்தின் விலைநிலமான கேப்டன் நெய்கிஸாகுவோ கெங்குரூஸ் அவர்களை பற்றி காணலாம்.

வீட்டில் உள்ளோர்கள் அவரை நெய்பு என்றும் , அவரின் கீழ் பணிபுரிந்து வடநாட்டு இராணுவ வீரர்கள் நிம்பு சஹாப் என்று தான் அவரை அழைப்பார்கள். கேப்டன் கெங்குரூஸ் நாகலாந்தின் கொஹிமாவில் அருகில் உள்ள நெர்ஹெமா என்ற ஊரில் பிறந்தவர்.சில நூற்றாண்டுகளுக்கு முன் அந்த ஊர் தலை வெட்டும் வீரர்கள் வாழும் வீரம் விளைந்த ஊர் என்று பொருள்படும் பெயரால் அழைக்கப்பட்டது.(நாகா மக்களின் தொழில் போர் மற்றும் தலை வெட்டுவது தான்.இயற்கையிலேயே போர்க்குணம் மற்றும் காடுகள்,மலைப்பகுதியில் போரிடும் ஆற்றல் பெற்றவர்கள்)

அந்த போர்க்குணம் இயல்பாகவே கேப்டனிடம் இருந்ததும் வியப்பில்லை.அவருடைய தாத்தா ஊரிலேயே மதிக்கப்படும் ஒரு பெரிய வீரராக இருந்துள்ளார்.அவரைப் போலவே அவரது பேரன் நமது கேப்டனுக்கு அந்த ஊரில் மிகப் பெரிய மதிப்பு இன்று உள்ளது.

கேப்டனின் அப்பா அரசு வேலையில் பணிபுரிந்து வந்தார்.தீவிர மதப்பற்றும் ,போருக்கு எதிரான மனப்போக்கையும் கொண்டிருந்ததால் அவர் தனது மகன் இராணுவத்தில் இணைவதை விரும்பவில்லை.ஆனால் கேப்டன் அவரிடம் பாதுகாப்பு படைகளில் இணைந்து தேசத்தை காக்க வேண்டும் என்பதே பெருமை என்பதை தனது அப்பாவுக்கு சமாதானம் சொல்லி படையில் இணைந்தார்.கொஹிமாவில் அறிவியல்கல்லூரியில் பட்டம் பெற்ற பின் பின் அரசு உயர்நிலைப் பள்ளியில் சிறிது காலம் ஆசிரியராக பணியாற்றி பின் டிசம்பர் 12,1998ல் இந்திய இராணுவத்தில் இணைந்தார்.

அடுத்த வருடமே கார்கில் போர் தொடங்கியது. 1999ல் ஜீனியர் கமாண்டராக இராஜபுதன ரைபிள்ஸ் பட்டாலியனில் இணைந்தார்.அவருடைய அற்பணிப்பு மற்றும் வேகம் காரணமாக கடக் பிளாட்டூனின் முன்னனி கமாண்டராக மாற்றப்பட்டார்.கடக் பிளாட்டூன் கமாண்டராக மாறுவது அவ்வளவு எளிதாக காரியமல்ல நண்பர்களே!!

ஜீன் 28,1999 இரவு. பாக் படைகள் கைப்பற்றிய ஒரு அதிமுக்கியத்துவம் வாய்ந்த மலையில் அமைந்திருந்த இயந்திர துப்பாக்கி நிலையை கைப்பற்ற கேப்டனுக்கும் அவரது வீரர்களுக்கும் உத்தரவு பறந்தது.அந்த மலைப்பகுதி கருப்பு பாறை என அழைக்கப்பட்டது.

மலையை கைப்பற்ற தயாரான வீரர்கள் குழு எதிரிகளிடம் இருந்து கடும் எதிர்ப்பை கண்டது.ஒவ்வொரு முறையின் மலையின் பக்கம் செல்லும் போதும் மேலிருக்கு பாக் துருப்புகள் மோர்ட்டார் மற்றும் தானியங்கி துப்பாக்கிகள் மூலம் நமது வீரர்களை கடுமையாக தாக்கினர். நமது வீரர்களுக்கு பலத்த அடி.கேப்டனின் அடிவயிற்றில் ஒரு குண்டு பாய்ந்தது.சில வீரர்களும் இறந்தனர்.ஆனால் கேப்டன் தனது வீரர்களுக்கு தளராமல் உத்தரவிட்டு கடைசி மலை முகட்டை அடைந்தனர்.அது செங்குத்தான பகுதி.அதன் மேல் சென்றால் தான் பாக் பங்களர்களை அழிக்க முடியும்.
அது ஒரு பனிக்கட்டி மலை.வீரர்களுக்கு முன்னுதாரணமாக ஒரு கயிற்றை தானே மேலே ஏற முடிவு செய்தார்.குண்டு பாய்ந்து இரத்தம் சொட்டுகிறது.பனிமலையின் மேல் ஏறும் போது தனது காலணி வழுக்கி கொண்டு சருக்குகிறது.அவரால் பின்வாங்கி சென்றிருக்க முடியும்.மருத்துவ உதவிகளைகூட பின்வாங்கினால் பெற்றிருக்க முடியும்.ஆனால் அவர் பின்வாங்க தயாராக இல்லை.

வீரத்தின் முகமாகவும்,நாகாக்களுக்கே உரிய போர்குணத்துடன் நம்பமுடியத வீர செயலை செய்ய முனைந்தார்.ஆம் அந்த 16,000அடி உயரத்தில் உறையவைக்கும் -10டிகிரி குளிரில் தனது காலணிகளை கலற்றிவிட்டு வெறும் காலுடன் மலைமுகட்டில் ஏற தொடங்கினார்.தன்னுடன் ஒரு ராக்கெட் லாஞ்சரையும் தூக்கி சென்றார்.

மேலே சென்ற அவர் தன் கண்முன்னே இருந்த ஏழு பாக் பங்கர்களை நோக்கி இராக்கெட்டை செலுத்தினார்.எதிரிகள் கேப்டனை நோக்கி சுடத்தொடங்கினர்.இருந்தாலும் விடவில்லை.கேப்டன் தொடர்ச்சியாக அவர்களை நோக்கி சுட்டுக் கொண்டிருந்தார்.இரண்டு பாக் வீரர்கள் கேப்டனை நோக்கி ஓடி வந்தனர். கையில் இருந்த கத்தியைஎடுத்தார்.அவர்கள் கதையை முடித்தார்.மேலும் இரண்டு பாக் வீரர்களை தனது துப்பாக்கியால் வீழ்த்தினார்.ஆனால் அப்போது தொடர்ந்து வந்த பாக் தோட்டாக்கள் கேப்டனை துழைத்து சென்று அவரை மலை முகட்டில் இருந்து கீழே தள்ளியது. அவர் பாக் பங்கர்களுக்கு ஏற்படுத்திய பலத்த அடி காரணமாக மற்ற வீரர்கள் மேலே சென்று அந்த மலைப் பகுதியை கைப்பற்றினர்.

அந்த மலையை கைப்பற்றிய பின்னர்,அந்த வீரரகள் கீழே பார்த்தனர்.தங்களது கேப்டன் உயிரற்று இரத்த வெள்ளத்தில் மிதந்து கீழே கிடப்பதை கணடனர்.கண்களில் கண்ணீர் பெருகி ஓடுகிறது.கதறினர்.கோபம் தலைக்கு மேல் சென்றது.கத்தினர்.அந்த வெற்றியை தங்களது கேப்டனின் பாதங்களில் சமர்ப்பித்து கண்ணீர் குளமான கண்களுடன் தங்கள் கேப்டனை பார்த்தபடி நின்றனர்.

“Yeh aapki jeet hai, Nimbu Sahab. Yeh aap ki jeet hai.”

ஒற்றை ஆளாக மலைமீதேறி பாக் படைகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்த கேப்டன் கேங்குருஸ் வெறும் 25 வயதிலேயே வீரமரணத்தை தழுவினார்.அவர் தனது அப்பாவிற்கு கடைசி கடிதத்தில் இவ்வாறு காற்று அடிப்பதால் நமது கொடி மறப்பதில்லை,அதைக் காக்க வீரமரணம் அடைந்த ஒவ்வொரு வீரரின் மூச்சுக் காற்றால் தான் பறக்கிறது.

வெறும் 25 வயதில் கேப்டன் கேங்கருஸ் வீரமரணம் அடைந்தார்.

“அப்பா நான் திரும்ப வந்து நமது குடும்பத்துடன் இணைவது சாத்தியமாகாமல் போகலாம்.அப்படி வரவில்லையென்றால் எனக்காக அழவேண்டாம்.நான் எனது தேசத்திற்கு என்னுடைய பங்களிப்பை செய்ய முடிவு செய்துவிட்டேன்” என தனது அப்பாவிற்கு கடைசி கடிதத்தில் குறிப்பிட்டுருந்தார்.

போரில் வீரமாக செயல்பட்ட காரணத்திற்காக போர்க்காலத்தில் வழங்கப்படும் இரண்டாவது மிக உயரிய விருதான மகாவீர் சக்ரா வழங்கி பெருமை கொண்டது இந்தியா.

அவரது திருவுடல் திம்மாபூர் வரவழைக்கப்பட்டது.அவரது கிராமத்தைை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டனர். அவரது உடல் முழு இராணுவ மரியாதயைுடன் அடக்கம் செய்யப்பட்டது.கடந்த 30 வருடங்களால நாகாலாந்தில் தேசத்திற்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தை மறந்து அனைவரும் ஓரணியில் நின்ற தங்களது உண்மையான வீரனுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

கேப்டன் கெங்குருசை போன்ற வீரர்கள் தினமும் பிறப்பதில்லை.நாகா மண்ணில் பிறந்து இந்தியவை காப்பாற்ற போராடிய இந்த மண்ணின் மைந்தனை என்றும் மறவோம்.

இவைகளை தான் நம் புத்தகத்தில் படிக்க வேண்டும்.