கேப்டன் ஹனிப் உடின்

பிறந்த தினம்: ஆக 23, 1974

இடம் : டெல்லி

சேவை : இராணுவம்

தரம் : கேப்டன்

சேவை காலம் : 1997 – 1999

பிரிவு : 11 பட்டாலியன்

ரெஜிமென்ட் : இராஜபுதன ரைபிள்ஸ்

விருது : வீர் சக்ரா

வீரமரணம் :ஜீன்  6, 1999

கேப்டன் ஹனிப் உடின்  டெல்லியில் 23 ஆகஸ்ட் 1974ல் பிறந்தார். தனது எட்டாவது வயதிலேயே தந்தையை இழந்த ஹனிப்பிற்கு இரு சகோதரர்கள், நபீஸ் மற்றும் சமீர்.கேப்டன் ஹனிப் டெல்லியில் உள்ள சிவாஜி கல்லூரியில் அறிவியல் பட்டம் பெற்றார்.கேப்டன் ஒரு தேர்ந்த கணினி வல்லுநர் எனினும் பாடுவதிலும் வல்லவர்.அவரது கல்லூரியில் மிக பிரபலமானவர்.

கேப்டன் ஹனிப் ஒழுக்கத்திற்கு பேர் போனவர்.இராணுவத்தின் இணைய அதிக விருப்பம் கொண்டவர்.1996ல் இந்திய இராணுவ அகாடமியில் இணைந்தார்.இராணுவத்திற்குள் செல்வது அவருக்கு எளிதான பணியாக இருக்கவில்லை.அவரது குடும்பத்தில் இராணுவத்திற்கு யாரும் சென்றிராத காரணத்தால் அவருக்கு வழிகாட்ட யாரும் இல்லை.சுயமாக கடினமான தேர்வு எழுதி பின் பயிற்சி பெற்றே இராணுவத்தில் இணைந்தார்.அவரது அம்மா பெருமை கொண்டார்.இராணுவத்தில் 11வது பட்டாலியன் இராஜபுதன ரைபிள்ஸ் பிரிவில் ஜீன் 7,1997ல் இணைந்தார்.முதலில் சியாச்சின் பகுதியிலும், கார்கில் போரின் போது லடாக்கின் துர்துக் பகுதியிலும் பணிபுரிந்தார்.

தனது படைப் பிரிவு வீரர்களுக்கு பாடல்கள் பாடி அனைவரையும் மகிழ்விப்பார்.வீடுகளில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து வீரர்களுக்கும் கேப்டனின் பாடல்கள் ஆறுதலாகவும்,புத்துணர்வு ஊட்டுவதாயும்  அமைந்தது.

கார்கில் போரில் தன்டரபோல்ட் நடவடிக்கை

கார்கில் போர் தொடங்கி வெறும் சில நாட்கள் தான் ஆகியிருந்தது.அந்த நேரத்தில் எதிரிகள் குறித்து குறைந்த தகவல்களே வந்துகொண்டிருந்தது.கேப்டனின் 11வது இராஜபுதன படைப்பிரிவு துர்துக் பகுதியில் 18,000அடி உயரத்தில் நிலை கொண்டிருந்தது.தன்டர்போல்ட் நடவடிக்கை தொடங்கியது.அவர்களது நோக்கம் துர்துகில்  உள்ள பகுதிகளை கைப்பற்றி பின் நிலை கொண்டு எதிரி நடவடிக்கைகளை கண்காணிப்பது.போரின் தொடக்க காலத்தில் இது மிக முக்கியமானதொன்றாக இருந்தது.கேப்டன் இதற்கு தனாக முன்வந்தார்.ஒரு ஜீனியர் கமிசன் அதிகாரி மற்றும் மற்ற மூன்ற அதிகாரிகளுடன் கிளம்பினார்.4 மற்றும் 5 ஜீன் இரவில் நல்ல முன்னேற்றத்துடன் அருகில் உள்ள நிலைகளை கைப்பற்றினர்.தங்கள் கைப்பற்ற வேண்டிய ஒரு எதிரி நிலைக்கு அடுத்த பகுதியில் இருந்த நிலையை கைப்பற்றி 6 ஜீனில் தங்கள் கைப்பற்ற வேண்டிய நிலைக்கு செல்ல தயாரானார்கள்.18,500அடி உயரம்.மனதளராமல் அந்த குளிரிலும் சென்றனர்.அந்த நேரத்தில் எதிரி நமது வீரர்களை பார்க்க, சுட தொடங்கினான்.நமது வீரர்களும் தயாரானார்கள்.ஆனால் எதிரி அதிக பலத்துடன்,ஆர்ட்டில்லரி உதவியுடன் இருந்தான்.

அந்த நேரத்தில் கேப்டன் ஹனிப் தன் பாதுகாப்பை விட தனது சக வீரரகளின் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தினார்.ஒரு இடத்தை தேர்வு செய்து எதிரிகள் மீது தாக்குதல் நடத்தினார்.இதில் அவர் கடும் காயம் அடைந்தார்.தன் சக வீரர்கள் பாதுகாப்பான இடம் செல்லும் வரை தாக்கி கொண்டே இருந்தார்.விரைவில் அவரிடம் இருந்த குண்டுகள் முடிவடைய ,எதிரிகள் எல்லா புறத்திலும் இருந்து அவரை தாக்க தொடங்கினர்.தாங்கள் கைப்பற்ற இருந்த நிலை வெறும் 200மீ தூரத்தில் இருக்கும் போது அவர் வீரமரணம் அடைந்தார்.போரின் போது தனது அதிகபட்ச வீரத்தை வெளிப்படுத்தினார்.தனது பாதுகாப்பை சிறிதும் நோக்காமல் தனது சகவீரர்களை பாதுகாத்தார்.அவர் வீரமரணம் அடைந்த போது வயது வெறும் 25தான்.தான் இராணுவத்தில் இணைந்த இரண்டு வருடத்தில் அதே நாளில் வீரமரணம் அடைந்தார்.போர் முடியும் வரை அவரது திருவுடலை கொண்டு வரை முடியவில்லை.காரணம் காலநிலை மற்றும் எதிரிகளின் நிலை.ஒரு வீரராக ஹனிப் இந்த நாட்டிற்கு பெருமையுடனும் அர்பணிப்புடனும் பணியாற்றியுள்ளார் என அவரது மரணத்தை அறிந்த பின் அவரது அம்மா கதறி அழுதார்.

“Ek pal mein hai sach saari zindagi ka; Iss pal mein jee lo yaaron, yahan kal hai kisne dekha (வாழ்க்கையின் உண்மை நடந்துகொண்டிருக்கும் இந்த தருணம் மட்டுமே.இந்த தருணத்தில் வாழ்வோம்.எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது என்பதை யார் அறிவார் The truth of our lives is encapsulated in one moment; Live this moment, who knows what tomorrow holds).

இந்த வரிகள் கேப்டனின் சிறிய தம்பி சமீர் அவர்கள் எழுதியது.கேப்டன் இந்த வார்த்தைகளை தனது படைப்பிரிவினருக்கு அடிக்கடி பாடி காட்டுவார்.இந்த பாட்டின் ஆண்மாவிலேயே அவர் வாழ்ந்தார்.வாழ்கிறார்.

இன்னும் வாழ்வார் மக்கள் மனதில் உள்ள வரை.

வீரவணக்கம் கேப்டன்