வீரர்கள் அதிரடி; காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

  • Tamil Defense
  • June 29, 2020
  • Comments Off on வீரர்கள் அதிரடி; காஷ்மீரில் மூன்று பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

காஷ்மீரின் அனந்தநாக்கில் நடந்து வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் அதிரடியாக வீழ்த்தியுள்ளனர்.

குல்சோகர் என்னுமிடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியுள்ளதாக வீரர்களுக்கு கிடைத்த தகவலை அடுத்து அங்கு ஆபரேசன் ஏவப்பட்டது.

தேடுதல் வேட்டையின் போது பயங்கரவாதிகள் இராணுவ வீரர்களை நோக்கி சுட வீரர்கள் பதிலடி தாக்குதல் நடத்தினர்.

இதனையடுத்து நடைபெற்ள என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.அவர்களிடம் இருந்து ஒரு ஏகே-46 மற்றும் இரு பிஸ்டல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.