
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா வட்டாரத்தில் உள்ள ட்ரால் பகுதியில் சேவா உலார் எனும் கிராமத்தில் இரவு முதலே பயங்கரவாதிகளுடனான துப்பாக்கி சண்டை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் முக்கிய ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியும் அவனது இரண்டு கூட்டாளிகளையும் பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் தளபதியின் பெயர் காசிம் என தெரிய வந்துள்ளது.
இந்த நடவடிக்கையை இந்திய ராணுவம், மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை இணைந்து மேற்கொண்டனர்.
இந்த மாதத்தில் மட்டுமே 35 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் காஷ்மீரில் சுட்டு வீழ்த்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.