
காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்பு படை வீரர்கள் இணைந்து நடத்தி வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
ஆபரேசன் லகிர்புர் எனும் பெயரில் இந்த ஆபரேசன் நடைபெற்று வருகிறது.சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த வியாழன் அன்று காஷ்மீரில் இரு வேறு பகுதிகளில் நடைபெற்ற என்கௌன்டரில் எட்டு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.
வீழ்த்தப்பட்ட பயங்கரவாதிகள் ஜெய்ஷ் இ மொஹம்மது பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது.
இவர்கள் மூவரும் சுற்றி வளைக்கப்பட்ட பின்னர் அவர்களது பெற்றோர்களை அழைத்து வந்து சரணடையும் படி கோரிக்கை விடுத்தோம், ஆனால் அவர்கள் அதனை நிராகரித்தனர் என காஷ்மீர் பகுதி ஐஜி விஜய் குமார் தெரிவித்தார்.