
கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசியாவுக்கு சொந்தமான நட்டுனா கடல்பகுதியில் சீன கப்பல்கள் அத்துமீறி மீனாபிடித்ததை அடுத்து இந்தோனேசியா மற்றும் சீனா இடையை பிரச்சினை ஏற்பட்டது. மேலும் இந்தோனேசிய கடல்பகுதியில் அடிக்கடி சீன கப்பல்கள் அத்துமீறுவது வாடிக்கையாக உள்ளது.
இதனையடுத்து நீண்ட தூரம் பயணித்து கண்காணிக்கும் வகையிலான கப்பல்களை வாங்க இந்தோனேசிய அரசு முடிவு செய்துள்ளது.

இதனையடுத்து டென்மார்க் கடற்படையின் “ஐவர் ஹுய்ட்ஃபீல்ட் ரக ஃப்ரிகேட் கப்பல்கள்” இரண்டை வாங்க முடிவு செய்துள்ளது.
இதனையடுத்து இந்தோனேசிய அரசு குழு ஒன்று டென்மார்க் கடற்படையின் ஐவர் ஹுய்ட்ஃபீல்ட் ரக போர்க்கப்பலான நீல்ஸ் ஜுயல் கப்பலை பார்வையிட்டது.
இந்தோனேசிய அரசு இந்த கப்பல்களை கட்டிய ஒடன்ஸ் ஸ்டால்ஸ்கிப்ஸ்வார்ஃப்ட் நிறுவனத்தின் உதவியோடு தொழில்நுட்ப பரிமாற்றம் அடிப்படையில் இந்தோனேசியாவிலேயே இக்கப்பல்களை கட்ட விரும்புகிறது.
இந்த ரக கப்பல்கள் 6600 டன்கள் எடையும், 138 மீட்டர் நீளமும் கொண்டவை ஆகும். 32 விமான எதிர்ப்பு ஏவுகணைகளும், 24 கப்பல் மற்றும் ஏவுகணை எதிர்ப்பு ஏவுகணைகளும் இரண்டு 76மிமீ ஒட்டோ மெலொரா பிரங்கிகளும், ஒரு 35மிமீ நெருங்கிய தற்காப்பு துப்பாக்கியும், 2 நீரடிகணை ஏவுகுழல்களும் இக்கப்பல்களில் உள்ளன.
இந்த ரக கப்பல்கள் ஒரு எம்.ஹெச் 60 ரோமியோ நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை ஹெலிகாப்டரை சுமக்கும் திறன் கொண்டது ஆகும்.