
தைவான் மிக நீண்ட காலமாக சீனாவால் ஆக்கிரமிப்பு செய்யப்படும் பேராபத்தை எதிர்நோக்கி உள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளான் பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு சீனா ஆயுதம் ஏற்றுமதி செய்து வருகிறது. இவற்றை இந்தியாவுகாகு எதிராக இந்நாடுகள் பயன்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
ஆகவே தைவானுக்கும் இந்தியா இத்தகைய உதவிகளை செய்யலாம், காரணம் மிக நீண்ட கிலமாகவே அமெரிக்க உதவியை மட்டுமே தைவான் பெறும் சுழலில் உள்ளது.
தற்போது டீசல் எலக்ட்ரிக் நீர்மூழ்கிகளை உள்நாட்டிலேயே கட்டமைக்க தைவான் விரும்புகிறது ஆனால் அமெரிக்கா தற்போது அணுசக்தியால் இயங்கும் நீர்முழ்கிகளை மட்டுமே கட்டமைத்து வருகிறது.
ஆகவே உள்நாட்டிலேயே டீசல் எலக்ட்ரிக் மற்றும் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிகள், அதிநவீன போர்கப்பல்கள் ஆகியவற்றை தயாரித்து அனுபவம் பெற்றுள்ள இந்தியா தைவானுக்கு உதவிட வேண்டும் என பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதன்மூலம் இந்தியாவுக்கு பொருளாதார நன்மை கிடைக்கும் அதே நேரத்தில் தைவானுடன் வலிமையான நட்புறவும், அவர்களின் பல்துறை தொழில்நுட்ப அறிவியல் உதவியும் கிடைக்கும் அதே நேரத்தில் சீனாவுக்கு இந்த நட்புறவு மிகப்பெரிய தலைவலியை அளிக்கும் என்பதில் ஐயமில்லை.