தேஜசின் மூன்றாவது தயாரிப்பு வரிசை-விரைவில் தொடக்கம்

  • Tamil Defense
  • June 2, 2020
  • Comments Off on தேஜசின் மூன்றாவது தயாரிப்பு வரிசை-விரைவில் தொடக்கம்

இந்த வருட நவம்பர் மாதத்தில் தேஜஸ் விமானத்தயாரிப்பிற்கான மூன்றாவது தயாரிப்பு நிலையத்தை தொடங்க ஹால் நிறுவனம் முயற்சித்து வருகிறது.இந்த தயாரிப்பு நிலையத்தில் முதற்கட்டமாக இரு இருக்கைகள் கொண்ட தேஜஸ் பயற்சி விமானங்கள் தயாரிக்கப்படும்.முதற்கட்டமாக 18 விமானங்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கென நெக்குண்டி என்னுமிடத்தில் 30000 சதுர அடி நிலம் உபயோகப்படுத்தப்பட உள்ளது.இங்கு ஹேங்கர்கள் உட்பட பல வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளது.

இந்த மூன்றாவது லைன் வருடத்திற்கு எட்டு விமானங்கள் என்ற அளவில் தயாரிக்கும்.அடுத்த 2021ல் முதல் இரு இருக்கை தேஜஸ் பயிற்சி விமானம் தயாரிக்கப்படும்

இது தவிர தற்போது சுகாய் விமானங்களை தயாரித்து வரும் நாசிக் பிளான்வடை நான்காவது தேஜஸ் தயாரிப்பு லைனாக மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.நான்காவது தளம் தேவை தான் என விமானப்படை முடிவு செய்யும் பட்சத்தில் இந்த தளம் வருடத்திற்கு 20 விமானங்கள் என உற்பத்தி செய்ய முடியும்.