காஷ்மீரில் லஷ்கர் இயக்கத்தின் ஹவாலா மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுவினர் மிகப்பெரிய அளவில் போதை மருந்துகளுடன் கைது !!

  • Tamil Defense
  • June 11, 2020
  • Comments Off on காஷ்மீரில் லஷ்கர் இயக்கத்தின் ஹவாலா மற்றும் போதைப்பொருள் கடத்தல் குழுவினர் மிகப்பெரிய அளவில் போதை மருந்துகளுடன் கைது !!

காஷ்மீரின் ஹன்ட்வாரா பகுதியில் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் மூவர் மிகப்பெரிய அளவில் போதை பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களின் பெயர்களாவன;
1) இஃப்திகார் இந்த்ராபி (முக்கிய குற்றவாளி, ஏற்கனவே பல போதைப்பொருள் தொடர்பான இவன் மீது பதியபட்டுள்ளது)
2) மொமீன் பீர் (முதன்மை குற்றவாளியின் மருமகன்)
3) இக்பால் அல் இஸ்லாம்.

இவர்கள் மூவருமே லஷ்கர் இ தொய்பா இயக்க பயங்கரவாதிகளின் செலவுக்காக போதைப்பொருளை கடத்தி விற்று அதில் வரும் பணத்தை ஹவாலா வழியாக அந்த இயக்கத்துக்கு வழங்கி வந்துள்ளனர்.
இவர்களை பாகிஸ்தான் வழிநடத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பலரின் வாழ்க்கையை சட்டத்திற்கு புறம்பான போதைப்பொருள் கொடுத்து சீரழித்து அந்த பணத்தில் பயங்கரவாதம் செய்து பல குடும்பங்களை அநாதைகளாக மாற்றுவது தான் இந்த பயங்கரவாதிகளின் பணி. காஷ்மீரின் மறைக்கப்பட்ட மறுபக்கம். இதைப்பற்றி யாருக்கும் வாய்திறக்க துணிவில்லை.

மூவரையும் கைது செய்யும்போது 21கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 147கோடி ருபாய் ஆகும், இதைத்தவிர 1.34 கோடி ருபாய் இந்திய பணமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி பேசிய ஹன்ட்வாரா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் ஜி.வி. சுந்தீப் சக்ரவர்த்தி ” இது மிகப்பெரிய அளவிலான பறிமுதல் நடவடிக்கைகளில் ஒன்றாகும், இந்த நெட்வொர்க்கில் பலர் கைது செய்யப்படுவர் எனவும் கைது செய்யப்பட்ட மூவரும் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பில் இருந்தனர்” என கூறினார்.