லடாக்கில் வீரமரணமடைந்த அனைத்து வீரர்களின் குடும்பங்களுக்கும் தெலுங்கானா அரசு நிதி உதவி !!

தெலுங்கானா மாநிலம் சூர்யபேட் பகுதியை சேர்ந்தவர் கர்னல். சந்தோஷ் பாபு . இவர் பீஹார் ரெஜிமென்ட்டின் 16ஆவது பட்டாலியனுடைய கட்டளை அதிகாரியாக இருந்தார்.

லடாக்கில் கல்வான் பகுதியில் சீன படையினருடன் நடைபெற்ற மோதலில் சீனர்களுடன் தீரமாக மோதி இருவரை கொன்று ஒருவனின் கண்களை குருடாக்கிய பின்னரே வீரமரணமடைந்தார்.

தெலுங்கானா அரசு அவரது குடும்பத்திற்கு 5கோடி ருபாய் நிதி உதவி, வீட்டு வசதிக்கான ஒரு நிலம் மற்றும் அரசு வேலை ஆகிய உதவிகளை அறிவித்துள்ளது. இந்த உதவிகளை விரைவில் தெலுங்கானா முதல்வர் திரு. சந்திரசேகர ராவ் கர்னல் சந்தோஷ் பாபு அவர்களின் குடும்பத்தை சந்தித்து வழங்க உள்ளார்.

மேலும் வீரமரணமடைந்த பிற மாநிலங்களை சேர்ந்த 19 வீரர்களுக்கும் தெலுங்கானா அரசு 10லட்சம் ருபாய் நிவாரண உதவி வழங்க முடிவு செய்துள்ளது, இதை பாதுகாப்பு துறை அமைச்சகத்துடன் இணைந்து அம்மாநில அரசு செயல்படுத்த உள்ளது.

இதுகுறித்து தெலுங்கானா முதல்வர் திரு. சந்திரசேகர ராவ் பேசுகையில் ” நாட்டிற்காக வீரமரணமடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு நாம் உதவி செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசு உதவி செய்தாலும் மாநில அரசுகளும் உதவி செய்ய வேண்டும்” என கேட்டு கொண்டார்.