கல்வான் வீரருடைய உடலை சுமந்து சென்ற 65வயது தாயும், 19வயது மகளும் !!

  • Tamil Defense
  • June 21, 2020
  • Comments Off on கல்வான் வீரருடைய உடலை சுமந்து சென்ற 65வயது தாயும், 19வயது மகளும் !!

கல்வான் பள்ளதாக்கில் நடைபெற்ற மோதலில் சுமார் 20 இந்திய வீரர்களை நாம் இழந்தோம்.

இவர்களில் பஞ்சாபை சேர்ந்த நாயப் சுபேதார் சத்நாம் சிங் அவர்களும் ஒருவர் ஆவார்.

அவருடைய இறுதி சடங்கின் போது தாயார் காஷ்மீர் கவுர் (65) மற்றும் மகள் சந்தீப் கவுர் (19) ஆகிய இருவரும் சமுதாய கட்டுபாடுகளை மீறி நாயப் சுபேதார். சத்நாம் சிங் அவர்களின் உடலை சுமந்தனர். இது காண்போரை கண் கலங்க செய்தது.

திருமதி. காஷ்மீர் கவுர் கூறுகையில் “எனது மகனுக்காக என்னால் செய்ய முடிந்தது இவ்வளவு தான் நாட்டிற்காக வீரமரணமடைந்த எனது மகனை நினைத்து பெருமை கொள்கிறேன்” என்றார்.