
தைவானுக்கு சொந்தமான பெங்கூ பகுதியில் உள்ள கடற்பகுதியில் சீனாவுக்கு சொந்தமான ஆழப்படுத்தும் கப்பல் ஒன்றை தைவான் கடலோர காவல்படை மடக்கி பிடித்து 10 குழுவினரை கைது செய்துள்ளது.
மேலும் ஃபார்மோஸா ஜலசந்தி பகுதியில் 20க்கும் அதிகமான சீன ஆழப்படுத்தும் கப்பல்களை தைவான் கடலோர காவல்படை கண்டுபிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.