
கடந்த ஜூன்22 ஆம் தேதி இந்திய மற்றும் சீன ராணுவ உயர் அதிகாரிகள் இடையை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது படைகளை பின்வாங் சீனா சம்மதம் தெரிவித்து இருந்தது.
ஆனால் சீனா இன்னமும் இதனல அமல்படுத்தாமல் மாறாக தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.
சமீபத்தில் தெப்சாங் சமவெளி பகுதியில் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளது, இது தவ்லத் பெக் ஒல்டி பகுதிக்கு மிகப்பெரிய ஆபத்தாக வந்து நிற்கிறது.
சீனாவின் இந்த நடவடிக்கைகளை எடுத்தோம் கவிழ்த்தோம் என கையாள முடியாது ஆகவே பொறுமையாக இதனை கையாள உள்ளதாக மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.