அசாதாரண சூழ்நிலைகளில் வீரர்கள் ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி-சீனப் பிரச்சனையில் முடிவு
1 min read

அசாதாரண சூழ்நிலைகளில் வீரர்கள் ஆயுதங்களை பயன்படுத்த அனுமதி-சீனப் பிரச்சனையில் முடிவு

சீன வீரர்களின் தாக்குதலில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் தழுவிய பிறகு புதிய விதிமுறையை மத்திய அரசு அறிவித்துள்ளது.அதன் படி மிக அசாதாரண சூழ்நிலையில் வீரர்கள் ஆயுதங்களை பயன்படுத்தி எதிரிகளை தாக்கலாம்.

இந்த புதிய விதிமுறையின் படி இந்திய இராணுவம் தனது வீரர்கள் துப்பாக்கிகள் பயன்படுத்தி எதிரிகளை தாக்க அனுமதி வழங்கியுள்ளது.

அங்குள்ள நிலைமையை பொருத்து லோக்கல் கமாண்டர்கள் முழு சுதந்திரமாக முடிவு எடுத்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வெளியான தகவல்படி சீன வீரர்கள் ஆயுதம் கொண்டு நமது வீரர்களை ஜீன் 15 அன்று தாக்கிய போது நமது வீரர்கள் ஆயுதம் கொண்டு அவர்களை தாக்கவில்லை.ஏனெனில் வீரர்களின் சீனியர் அதிகாரிகள் கட்டளை அது.இரு நாடுகளுக்கும் இடையே நம்பிக்கை ஏற்படுத்த அவ்வாறு செய்யப்பட்டதாக கூறப்படுவது ஆக முட்டாள் தனமாக தோன்றுகிறது.

அனைத்து கட்சி கூட்டத்திலும் எல்லைப்பிரச்சனை மீண்டும் ஏற்பட்டால் தகுந்த பதிலடி கொடுக்கப்படும் எனவும் இந்த தருணத்தில் அனைத்து கட்சிகளும் தனது ஆதரவை மத்திய அரசிற்கு வழங்கியுள்ளன.

கல்வான் பகுதி தங்களுடையது என்ற சீனாவின் கூற்றையும் மத்திய வெளியுறவு அமைச்சகம் மீண்டும் மறுத்துள்ளது.