கிழக்கு லடாக்கில் கணிசமான அளவில் சீன படைகள் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

  • Jecinth Albert
  • June 3, 2020
  • Comments Off on கிழக்கு லடாக்கில் கணிசமான அளவில் சீன படைகள் – பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் !!

கிழக்கு லடாக்கில் கணிசமான அளவில் சீன படைகள் நிலைநிறுத்தப்பட்டுளதாகவும் இதற்கு பதிலடி கொடுக்க சமமான அளவில் இந்திய படைகள் அங்கு இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். இந்திய அரசு சார்பில் இதுவே முதலாவது அதிகாரப்பூர்வ அறிவிப்பாக இது உள்ளது.

சீனர்கள் ஒரு பகுதி தங்களது என கருதுவதால் தான் இப்பிரச்சினை ஆகவே சீன அரசு இதுகுறித்து தீவிரமாக யோசனை செய்ய வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும் கூறுகையில் இந்தியா தேவையின்றி யாரையும் அவமதிக்காது அதைப்போல இந்தியாவின் சுயமரியாதைக்கும் யாரும் களங்கம் விளைவிப்பதை இந்தியா பொறுத்துக்கொள்ளாது எனவும் கூறினார்.

இந்தியா தனது பகுதியை பாதுகாத்து கொள்ள தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளதாகவும் மறுபுறம் ராஜாங்க ரீதியான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.