
சிக்கீம் மாநில அரசு வடக்கு மற்றும் கிழக்கு சிக்கீமில் உள்ள எல்லையோர கிராமங்களுக்கு இந்தியன் ரிசர்வ் பட்டாலியன் எனப்படும் சிறப்பு காவல் படையினரை அனுப்பியுள்ளது.
வடக்கு சிக்கீமில் உள்ள லாச்சென், லசூங் மற்றும் தங்கு ஆகிய கிராமங்களிலும், கிழக்கு சிக்கீமில் உள்ள குபூப் மற்றும் ஷெரதாங் ஆகிய ககராமங்களிலும் இப்படையினர் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து சிக்கீம் காவல்துறை டிஐஜி ப்ரவின் குருங் கூறுகையில் கடந்த வாரம் முதலே இப்பிரிவினர் மேற்குறிப்பிட்ட பகுதிகளில் உள்ளதாகவும், எல்லையில் பதற்றம் நிலவும் போது எல்லையோர பகுதிகளில் தரைப்படையினருக்கு உதவியாக இவர்கள் அனுப்பப்படுவது அரசு நடைமுறைகளில் ஒன்று எனவும் கூறினார்.
ஒருவேளை ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் எல்லையோர பகுதி மக்களின் உயிர் மற்றும் உடமைகளை காக்க இப்பிரிவினர் செயல்படுவர் எனவும் அவர் கூறினார.
ஆனால் எத்தனை வீரர்களை மேற்குறிப்பிட்ட பகுதிகளுக்கு அனுப்பி உள்ளனர் என்பதை அவர் கூறவில்லை.