
இன்று காலை காஷ்மீரின் அனந்த்னாக் மாவட்டத்தில் மூன்று பயங்கரவாதிகளை நமது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவினர் சுட்டு வீழ்த்தினர்.
காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் தேடுதல் வேட்டை மேற்கொண்ட போது பயங்கரவாதிகளுடன் மோதல் வெடித்தது.
இதனையடுத்து நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் மூவரும் வீழ்த்தப்பட்டனர், அவர்களிடமிருந்து ஆயுதங்கள் கைபற்றப்பட்டன.
இதனுடன் சேர்த்து இந்த வருடத்தில் இதுவரை 116 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர், அதுவும் ஜூன் மாதத்தில் மட்டுமே 38 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஆறு பேர் பல்வேறு இயக்கங்களின் முக்கிய தளபதிகள் என்பது குறிப்பிடத்தக்கது, அதிலும் ஹிஸ்புல் இயக்கம் பெரிய பின்னடைவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.