லடாக்கில் சீனப்படைக்குவிப்பை உறுதி செய்யும் செயற்கைகோள் படங்கள்

  • Tamil Defense
  • June 25, 2020
  • Comments Off on லடாக்கில் சீனப்படைக்குவிப்பை உறுதி செய்யும் செயற்கைகோள் படங்கள்

சீனா நிறுத்தவோ அல்லது பின்வாங்கவோ இல்லை ஆனால் தொடர்ந்து லடாக்கின் கல்வான் பகுதியில் படைக்குவிப்பில் ஈடுபட்டு வருகிறது.வீரர்கள்,இராணுவ வாகனங்கள்,எர்த் மூவர்ஸ் இயந்திரங்கள் மேலும் கட்டுமானங்கள் ஆகியவற்றை காண முடிகிறது.ஜீன் 15 இந்திய வீரர்கள் போரிட்ட பகுதிகளில் இத்தகைய கட்டுமானங்கள் மீண்டும் எழுந்துள்ளதை ஜீன் 22 செயற்கைகோள் படங்கள் உறுதிப்படுத்துகின்றன.

பேட்ரோல் பாய்னட் 14 அல்லது பிபி 14 என்னுமிடத்தில் சீனா புதிய கண்காணிப்பு நிலையத்தை அமைத்துள்ளது.இங்கு ஏற்கனவே இருந்த நிலையத்தை தான் நமது வீரர்கள் அழித்தனர்.அதில் 20 வீரர்களையும் இழந்தோம்.

கடந்த திங்கள் அன்று பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் பரஸ்பரம் படைவிலக்கம் கொள்ள வேண்டும் என முடிவு செய்தாலும் அது இன்னும் நடைபெறவில்லை.மாறாக படைக்குவிப்பே நடக்கிறது.

ஆற்றுப்படுக்கையில் பெரிய அளவிலான கட்டுமானங்கள் மற்றும் படைக்குவிப்பை தெளிவாகவே பார்க்க முடிகிறது.

கல்வான் தவிர தெப்சங்,கோக்ரா நிலை-ஹாட் ஸ்பிரிங் மற்றும் பாங்கோங் ஏரி என அனைத்துப் பகுதியிலும் படைக்குவிப்பு நிகழ்கிறது.இந்திய இராணுவமும் சீனர்களை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

போர்விமானங்கள்,வானூர்திகள்,டேங்க்,ஆர்டில்லரி,ஏவுகணை அமைப்புகளுடன் 10000 வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.இவற்றை எதிர் கொள்ள இந்தியாவும் இதே அளவிலான படையை குவித்துள்ளது.