விடுமுறையில் திருமணம் செய்யவிருந்த வீரர் துரதிர்ஷ்டவசமாக லடாக்கில் வீரமரணம் !!

  • Tamil Defense
  • June 18, 2020
  • Comments Off on விடுமுறையில் திருமணம் செய்யவிருந்த வீரர் துரதிர்ஷ்டவசமாக லடாக்கில் வீரமரணம் !!

சட்டீஸ்கர் மாநிலம் காங்கெர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் சிப்பாய் கணேஷ் குன்ஞ்சம்.

27 வயதான இந்த வீரருடைய பெற்றோர் இவருக்கு திருமணத்தை நிச்சயம் செய்திருந்தனர். அடுத்த விடுமுறையில் இவருக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் லடாக்கில் சீன படைகளுடன் நடைபெற்ற மோதலில் இவர் வீரமரணம் அடைந்தார். இச்செய்தி அந்த கிராமத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு ராணுவத்தில் இணைந்த வீரர் கணேஷ் சமீபத்தில் தான் ஒரு வீட்டை கட்டி முடித்துள்ளார்.